Lk Sudish About Eps,திமுகவிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் ? அதிமுகவிற்கு ஏன் கூடாது ? எல்.கே சுதீஷ் விளக்கம் – lk sudhish about differences between dmk and admk alliances

எடப்பாடி பழனிச்சாமி தேமுதிக கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். அதைப்போல தேமுதிகவும் எடப்பாடி பழனிசாமியை பதில் விமர்சனம் செய்து வந்தனர். குறிப்பாக திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்ததில் இருந்தே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக கூட்டணியை சேர்ந்தவர்கள் தேமுதிகவை விமர்சித்து வருகின்றனர். ஒருகட்டத்தில் தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென அவர்கள் திமுகவுடன் கூட்டணி வைத்தது பலருக்கும் ஆச்சர்யமான விஷயமாக அமைந்தது. அதிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி தேமுதிகவை கடுமையாக பேசி வருவதாக பலர் சொல்கின்றனர். குறைவான வாக்கு வங்கியை வைத்திருக்கும் தேமுதிக கட்சிக்கு திமுக பத்து தொகுதிகளை ஒதுக்கியுள்ளனர். திருமாவளவனின் விசிக போன்ற கட்சிக்கு குறைவான தொகுதிகளை வழங்கிவிட்டு அங்கீகாரம் இல்லாத தேமுதிக கட்சிக்கு பத்து தொகுதிகளை கொடுத்து திமுக பாரபட்சம் காட்டுகின்றது என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார்.

இவரின் இந்த விமர்சனம் தேமுதிகவை வெகுவாக சீண்டிவிட்டது. தங்களின் கட்சியை அங்கீகாரம் இல்லாத கட்சி என எடப்பாடி பழனிச்சாமி கூறியதால் அவர்கள் பதிலுக்கு விமர்சனம் செய்ய துவங்கிவிட்டனர். பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே சுதீஷ் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து கடுமையாக பேசி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எல்.கே சுதீஷ் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் ஏன் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் ? ஏன் அதிமுகவிற்கு வாக்களிக்க கூடாது என்பது குறித்து பேசியுள்ளார் எல்.கே சுதீஷ்.

இதுகுறித்து அவர் பேசியது என்னவென்றால், திமுக சிறப்பான முறையில் ஆட்சி செய்து வந்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியிருக்கின்றனர். மீண்டும் திமுக ஆட்சி வந்தால் தமிழகம் சிறப்பாக இருக்கும். அதற்காக திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். அதே சமயம் எடப்பாடி பழனிச்சாமி அனைவரையும் ஏமாற்றுவார். கூட்டணி காட்சிகளையும் ஏமாற்றுவார், மக்களையும் ஏமாற்றுவார்.

அதனால் அவர்களுக்கு வாக்களிக்க கூடாது என எல்.கே சுதீஷ் கூறினார். மேலும் இந்த தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சி இருக்காது எனவும் திட்டவட்டமாக கூறினார் எல்.கே சுதீஷ். இவர் மட்டுமல்லாமல் இந்த தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்று தான் திமுக கூட்டணியை சேர்ந்த பலரும் சொல்கின்றனர். அதற்கு முக்கிய காரணமாக பாஜகவின் கூட்டணியை குறிப்பிடுகின்றனர்.

பாஜக கண்டிப்பாக தேர்தலுக்கு பிறகு அதிமுகவை விழுங்கிவிடும், எடப்பாடி பழனிச்சாமி கண்டிப்பாக அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கமாட்டார் என சொல்கின்றனர். இதே கருத்தை தான் எல்.கே சுதீஷும் கூறியிருக்கின்றார். இந்நிலையில் தேமுதிகவினர் அதிமுகவினரின் விமர்சனங்களால் அதிருப்தியில் இருப்பதாகவே தெரிகின்றது. குறிப்பாக தேமுதிக என்ற கட்சியை அங்கீகாரம் இல்லாத கட்சி என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தது அவர்களை வெகுவாக சீண்டிவிட்டது.

எனவே இம்முறை மகத்தான வெற்றியை பெற்று மீண்டும் தங்களை நிரூபிக்கும் முயற்சியில் தேமுதிகவினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் அவர்கள் எதிர்பார்த்ததை போல செல்லவில்லை. 2011 ஆம் ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

இது அக்கட்சிக்கு சற்று பின்னடைவாக அமைந்தாலும் இம்முறை தேமுதிக என்கின்ற கட்சியின் பெருமையை நிலைநாட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளும் கட்சியான திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்திருப்பதாலும், பத்து தொகுதிகளில் போட்டியிடுவதாலும் கண்டிப்பாக கடந்த தேர்தலில் சந்தித்த பின்னடைவை சரி செய்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

Source link