அதன் பிறகு தொடர்ந்து திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்து வருகின்றார். களத்தில் திமுக மற்றும் தவெக இடையே தான் போட்டி என சொல்கின்றார். பதிலுக்கு விஜய் மீதும் தவெக மீதும் கடும் விமர்சனங்களும் சர்ச்சைகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் என்ன இருந்தாலும் விஜய்யின் வருகை அரசியலில் ஒரு மாற்றத்தை உண்டாக்கியிருப்பதாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியிருக்கின்றார்.
அவர் பேசிய கருத்துக்கள் தவெகவினரால் வரவேற்கப்படுகிறது. அவர் கூறியது என்னவென்றால், விஜய்யின் வருகை இளைஞர்கள் மத்தியில் இருக்கும் அரசியல் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. அதனை நாம் மறுக்கவே முடியாது. விஜய்யின் அரசியல் என்ட்ரி இளைஞர்கள் அரசியல் மீது கொண்ட ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது
பொதுவாக இளைஞர்கள் அவ்வளவாக அரசியலில் பங்குபெறுவது கிடையாது. அரசியல் என்றால் அவ்வளவாக ஆர்வம் காட்டாத இளைஞர்கள் அரசியல் களத்தில் குதித்திருக்கின்றனர். இளைஞர்களின் வருகை அரசியலுக்கு மிகவும் நல்லது என்பது தான் என்னுடைய கருத்து. இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை நான் பெரிதும் வரவேற்கின்றேன். மேலும் இதற்கு முன்பு இளைஞர்கள் பலர் அரசியலுக்கு வந்துள்ளனர். ஆனால் தற்போது 16 அல்லது 18 வயதிற்கு உட்பட இளைஞர்களின் அரசியல் ஆர்வம் மிகப்பெரியதாக உள்ளது. அதனை நான் பெரிய விஷயமாக பார்க்கின்றேன்.
விஜய்யின் அரசியல் என்ட்ரி இளைஞர்களின் அரசியல் ஆர்வத்தை தூண்டியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே தான் புதியவர்களுக்கு புதிய கட்சிகளும் அரசியலில் இருக்க வேண்டும் என நான் சொல்லிக்கொண்டு வருகின்றேன் என்றார்மாணிக்கம் தாகூர் எம்பி. இவ்வாறு விஜய்யின் அரசியல் வருகை குறித்து மாணிக்கம் தாகூர் பேசி வருவதை தவெக ஆதரவாளர்கள் வரவேற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆரம்பம் முதல் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலர் விஜய்யை தொடர்ந்து ஆதரித்து பேசி வருகின்றனர். அந்த லிஸ்டில் மாணிக்கம் தாகூரும் ஒருவர் என தெரிகின்றது. இதன் மூலம் ஒருவேளை காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் விஜய்யுடன் கூட்டணி வைக்க விரும்பித்தான் இருப்பார்களோ ? என்ற சந்தேகம் மேலும் எழுகின்றது
காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்பியதாக ஒரு தகவல் உண்டு. ஆனால் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட பெரும்பாலானோர் திமுக கூட்டணியே விரும்பியதால் மீண்டும் திமுக -காங்கிரஸ் கூட்டணி இணைந்திருக்கிறது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பலர் தவெக அலுவலகத்தில் இருக்கின்றனர் என ஆதவ் அர்ஜுனா பேசினார்.
இது காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சையை கிளப்பியது. அதன் பின் காங்கிரஸ் கட்சியில் இருந்து செல்வம் நீக்கப்பட்டார். அடுத்த நாள் அவர் விஜய்யின் தவெகவில் இணைந்தார். அவரும் காங்கிரஸ் கட்சியில் பலர் விஜய்யுடன் தான் கூட்டணி வைக்க விரும்பியதாக கூறினார். தற்போது மாணிக்கம் தாகூரும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து உயர்வாக பேசியிருக்கிறார். எனவே இதன் மூலம் காங்கிரஸ் கட்சியினர் சிலர் தவெக கூட்டணியை விரும்பியதாக கணிக்கப்படுகின்றது. ஒருவேளை காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி வைத்திருந்தால் தவெக கண்டிப்பாக மேலும் வலுப்பெற்று இருக்கும் என்பதே பலரது கருத்தாக உள்ளது
