Mk Stalin Challenge Edappadi Palanisamy,எடப்பாடி பழனிசாமியை அன்புமணி- டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்தார்கள்..பாஜக அதைவிட மோசமாக பேசினர் : முதலமைச்சர் ஸ்டாலின் – mk stalin heavly criticise edapaadi palanisamy and nda alliance in thenkasi campaign

முதலமைச்சர் முக ஸ்டாலின் தற்போது தென்காசி மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் அதிமுக கூட்டணி குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசினார் முக ஸ்டாலின்

முக்கிய அம்சங்கள்:

முதல்வரின் தென்காசி பரப்புரை

எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்த முக ஸ்டாலின்

mk stalin thenkasi campaign
முதலமைச்சர் முக ஸ்டாலின் திமுக வேட்பாளர்களுக்காக தீவிரமான வாக்கு சேகரித்து வருகின்றார். தொடர்ந்து திமுக வேட்பாளர்களுக்காக பரப்புரை செய்து வரும் முக ஸ்டாலின் அந்த பரப்புரையில் எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றார். பாஜக மற்றும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடி வருகின்றார் முதலமைச்சர். அந்த வகையில் தற்போது தென்காசி மாவட்டத்தில் பரப்புரை செய்தார் ஸ்டாலின்.அப்போது திமுகவின் திட்டங்கள் குறித்து பேசிய ஸ்டாலின் அதே சமயம் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தும் பேசியிருந்தார். திமுக அரசு கடந்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு பேசி வருகின்றார் ஸ்டாலின். அப்போது, நான் திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு சொல்வது போல எடப்பாடி பழனிசாமியால் அவர்கள் செய்த திட்டங்கள் குறித்து சொல்லமுடியுமா ? சவால் விடுகின்றேன். ஏற்கனவே செயல்பட்டு வந்த திட்டங்களை முடித்து தான் வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி என விமர்சித்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
அதோடு மட்டுமல்லாமல்தேசிய ஜனநாயக கூட்டணியையும் கடுமையாக முதலமைச்சர் சாடினார். எடப்பாடி பழனிச்சாமி ஒரு வார்டு கவுன்சிலராக கூட தகுதி இல்லாதவர் என அன்புமணி கூறியிருந்தார். இன்னும் கடுமையாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தார் அன்புமணி. இவரைத்தொடர்ந்து திடீரென எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்திருக்கின்றார் டிடிவி தினகரன். இவரும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
பழனிசாமியுடன் கூட்டணி வைக்க நான் விரும்பவில்லை, வெட்கப்படுகிறேன் என கூறினார் டிடிவி தினகரன். இவர்கள் மட்டுமல்லாமல் பாஜகவில் இருப்பவர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியை இதைவிட கடுமையாக பேசினார்கள். இவ்வளவு முரண்பாடுகளை வைத்துக்கொண்டு இவர்கள் கூட்டணி வைத்திருக்கின்றனர். ஊழலால் ஒன்று சேர்ந்த கூட்டணி தான் இது. இவர்களின் குடுமி அமித் ஷாவிடம் உள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி என்ற டப்பா எஞ்சினில் பயணம் செய்கின்றனர்.
அவர்களின் பிரச்சார யுக்தி என்பது அவதூறு பரப்புவது மட்டும் தான். ஆனால் நாங்கள் செய்த சாதனைகளை குறிப்பிட்டு பரப்புரை செய்கொன்றோம். கடந்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்பட்ட சாதனைகள் மற்றும் திட்டங்களை சொல்லியே நாங்கள் வாக்கு கேட்கின்றோம். அதுபோல எடப்பாடி பழனிச்சாமி அவர் செய்த திட்டங்களை சொல்ல முடியுமா ? என பேசினார்முதலமைச்சர் முக ஸ்டாலின்.
இந்நிலையில் ஒருபக்கம் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது பரப்புரையில் திமுகவையும் முக ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றார். அதைப்போல அதற்கு பதிலடி தரும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடி வருகின்றார். அதோடு மட்டுமல்லாமல் பாஜக கூட்டணியையும் விமர்சித்து பேசி வருகின்றார் ஸ்டாலின்.
இந்நிலையில் ஒருபக்கம் முதல்வர் முக ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில் மறுபக்கம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார். அவரும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து தான் பேசி வருகின்றார்/ அதோடு திமுக செய்த திட்டங்களையும் குறிப்பிட்டு வாக்கு சேகரித்து வருகின்றார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து திமுக மீது அவதூறு பரப்பி செய்து தான் பரப்புரை மேற்கொள்கின்றாரே தவிர அவர் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து பேசுவதே இல்லை என்பது தான் முக ஸ்டாலினின் வாதமாக உள்ளது. நாங்கள் செய்த திட்டங்களை கூறி வாக்கு சேகரிக்கின்றோம். ஆனால் எடப்பாடி பழனிசாமியால் அவர் செய்த திட்டங்களை பட்டியலிட முடியுமா ? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக முக ஸ்டாலின் முன் வைக்கின்றார்.

அதிமுகவை அழித்தது எடப்பாடி பழனிசாமி தான்- முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் ஆவேசம்

திமுக ஆதரவாளர்களும் இதே கருத்தை தான் கூறி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இவ்வாறு பேசியதை தொடர்ந்து அடுத்த பரப்புரையில் எடப்பாடி பழனிச்சாமி தாங்கள் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் காப்பி அடிக்கப்பட்டதாக பேசி விமர்சித்து வரும் எடப்பாடி பழனிச்சாமிதன் ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை அடுத்த பரப்புரையில் பட்டியலிடுவார் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.