Mk Stalin Reply To Eps,வாஜ்பாய் உடன் கூட்டணி தான் வைத்தோம்..கட்சியை அடகு வைக்கவில்லை..எடப்பாடி பழனிசாமிக்கு முக ஸ்டாலின் பதிலடி – mk stalin reply to edappadi palanisamy on dmk and bjp alliance

எடப்பாடி பழனிச்சாமி கலைஞர் கருணாநிதி வாஜ்பாய் உடன் இருக்கும் புகைப்படத்தை காட்டி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதில் தரும் வகையில் கரூர் பரப்புரையில் பேசியிருக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்

முக்கிய அம்சங்கள்:

எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

முதல்வர் முக ஸ்டாலின் பதிலடி

mk stalin dmk -bjp alliance
தேர்தல் பரப்புரை பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. திமுக, அதிமுக, தவெக என அனைத்து கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் முக ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் பரப்புரையில் களமிறங்கியுள்ளனர். இந்த பரப்புரையில் தவெக தலைவர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றனர். மறுபக்கம் அதிமுக திமுகவையும், திமுக அதிமுகவையும் மாறி மாறி விமர்சித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்துக்களை விமர்சித்து பதிலடி கொடுத்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின். அதாவது அதிமுகே பாஜகவுடன் கூட்டணி வைத்தது குறித்து தொடர்ந்து திமுக விமர்சித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியை கடும் விமர்சனம் செய்து வருகின்றனர் திமுகவினர்.
எடப்பாடி பழனிச்சாமி முழு சங்கியாக மாறிவிட்டதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் உட்பட திமுகவினர் விமர்சிக்கின்றனர். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், முதலமைச்சர் என்னை முழு சங்கியாக மாறிவிட்டதாக சொல்கின்றார். அப்போ பாஜகவுடன் திமுக ஒருகட்டத்தில் கூட்டணி வைத்தனர். வாஜ்பாய் உடன் கருணாநிதியும் முரசொலி மாறனும் இருக்கும் புகைப்படத்தை காட்டி, நான் சங்கி என்றால் அப்போ கருணாநிதியும் முரசொலி மாறனும் சங்கியா ? என கேள்விகேட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
இதற்கு கரூர் பரப்புரையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியது, எடப்பாடி பழனிச்சாமி புலனாய்வு புலி என நினைத்து காமெடி செய்துகொண்டு இருக்கின்றார். நாங்கள் வாஜ்பாய் உடன் கூட்டணி தான் வைத்தோமே தவிர அடகு வைக்கவில்லை. திமுக பாஜக உடன் கூட்டணி வைத்தபோது திமுக கட்சி கலைஞரிடம் தான் இருந்தது. ஆனால் அதிமுக இப்போ அவர்கள் கையில் இல்லை. அமித் ஷா கையில் தான் இருக்கு என பதிலடி கொடுத்து பேசியிருக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
இதோடு மட்டும் நிறுத்தாமல் புலிகேசி படத்தை குறிப்பிட்டும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் முக ஸ்டாலின். இந்நிலையில் திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது குறித்து திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் அவர்களே ஒருமுறை பேசியிருந்தார். அதாவது பாஜக உடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் யாரும் வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை. திமுக கட்சியே பாஜகவுடன் கூட்டணி வைத்து தோல்வியை சந்தித்துள்ளது என கூறினார் டிகேஎஸ் இளங்கோவன்.
ஆனால் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசுகையில், நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் திமுக என்ற கட்சி எங்களிடம் தான் இருந்தது என குறிப்பிட்டு பேசுகின்றார். தற்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஒருபக்கம் இருந்தாலும் பாஜகவின் பிடிப்பில் அதிமுக இருப்பதாக தான் திமுகவினர் குறிப்பிட்டு விமர்சனம் செய்கின்றனர். தொகுதிப்பங்கீட்டை கூட எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று அமித் ஷாவிடம் கலந்து பேசிவிட்டு தான் செய்கின்றார்.
அதிமுக பாஜகவின் பிடியில் இருக்கின்றது. இந்த தேர்தலுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியை பாஜக விழுங்கிவிடும் என கூறுகின்றனர். இதற்கு பதில் விமர்சனமாக திமுகவெ பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது. கலைஞர் வாஜ்பாய் உடன் இருந்த புகைப்படத்தை காட்டி அவர்களும் சங்கி தானே என கேள்வி கேட்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் கூட்டணி வைத்தது முக்கியமல்ல கூட்டணி வைத்தாலும் திமுக கட்சி எங்களிடம் தான் இருக்கின்றது என பதிலடி கொடுத்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.

அதிமுக – பாஜக கூட்டணியை நான் உடைக்கிறேனா? அண்ணாமலை பேட்டி..!

எனவே இதற்கு எடப்பாடி பழனிச்சாமி என்ன பதில் தரப்போகின்றார் என்பது தான் தற்போது கேள்வியாக உள்ளது. ஆனால் என்னதான் திமுக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தாலும் அவர் திட்டவட்டமாக ஒரு விஷயத்தை கூறிவிட்டார். அதாவது தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி, நான் தான் முதல்வர் வேட்பாளர் என திட்டவட்டமாக கூறியிருக்கின்றார். ஆனாலும் அதிமுக பாஜகவிற்கு அடிமையாக தான் செயல்படுகின்றனர் என்பதே திமுகவின் விமர்சனமாக தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.