சசிகலாவை கூட்டணிக்குள் கொண்டு வரும் எண்ணம் இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால், டிடிவி தினகரன் சேர்க்க சம்பந்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.காரணம் தென் மாவட்டங்களில்,முக்குலத்தோர் வாக்கு வங்கி டிடிவி தினகரனுக்கு அதிகம் என்பதால் பாஜக தவறவிடக் கூடாது என நினைத்து, எடப்பாடி சம்பந்தத்துடன் இணைத்தது. இதனைத் தொடர்ந்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், சசிகலா இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்கு டிடிவி தினகரன் ஒத்துழைப்பு வழங்குவார் என சசிகலா ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.ஆனால் அது நிறைவேற வில்லை.
ஒவ்வொரு கட்சிக்கும் திமுக போடும் Strategy!
இந்த நிலையில், தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்.இதனைத் தொடர்ந்து என்.டி.ஏ. கூட்டணிக் கட்சித் தலைவர்களான அன்புமணி மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் டெல்லி சென்றது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமித்ஷாவில் இலத்தில் சந்தித்து பேசிய பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி. தினகரன் பேசுகையில், திமுக என்கிற துரியோதனக் கூட்டணியை வீழ்த்தக்கூடிய பஞ்ச பாண்டவர் கூட்டணியாக நாங்கள் வலிமையாக இருக்கிறோம்.
எங்கள் தரப்பில் நியாயம் இருக்கிறது; தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து சசிகலா புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.தற்பொழுது என்.டி.ஏ. கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு ? சசிகலாவை கூட்டணிக்குள் கொண்டுவரும் எண்ணமில்லை; அதற்கான எந்த முயற்சியும் இல்லை; கூட்டணி முடிவடைந்துவிட்டது என இபிஎஸ் சொல்லிவிட்டார்; அதன்பிறகு கேள்வியே இல்லை. என்று கூறினார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் இடையே கடும் அரசியல் பிளவு ஏற்பட்டுள்ளது.
இதற்கான காரணங்களை ஆராய்ந்தபோது பல விஷயங்கள் வெளியாகியுள்ளன. சசிகலா தரப்பின் தகவல்படி, அவர் சிறையில் இருந்த காலத்தில் கட்சி தொடங்குவது குறித்து தினகரன் எடுத்த முடிவை சசிகலா ஏற்கவில்லை.அதையும் மீறி அவர் கட்சி தொடங்கியது இருவருக்கும் இடையே மனக்கசப்பை உருவாக்கியது. மேலும், பணம் தொடர்பான பிரச்சனைகளும் நம்பிக்கை இல்லாத வகையில் தினகரன் நடந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா மிகுந்த வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது.2021 தேர்தலுக்கு முன் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபோது, உடனடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அவர் முடிவு செய்தார்.
ஆனால் தினகரன் அதற்கு மாறாக செயல்பட விரும்பினார். இதுவும் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டை மேலும் தீவிரப்படுத்தியது.அதன்பிறகு இருவரும் ஒன்றாக சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்தன. பொதுவான நிகழ்ச்சிகளில் கூட ஒருவர் மற்றவரை தவிர்த்ததாக கூறப்படுகிறது. தினகரன் தனது முடிவுகளை தனிச்செயலாக எடுத்தது சசிகலாவுக்கு விருப்பமில்லாததாக இருந்தது. இதன் விளைவாக, இருவருக்குமிடையிலான உறவு நாளுக்கு நாள் விரிசல் அடைந்து, அரசியல் எதிரிகளாக மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
