ராமதாஸ் தரப்பும் சசிகலா துவங்கிய புதிய கட்சியும் கூட்டணி அமைத்துள்ளனர். இக்கூட்டணி குறித்து பல கருத்துக்கள் பதிவாகி வந்த நிலையில் திமுகவில் இணைந்திருக்கும் ஓபிஎஸ் இக்கூட்டணி குறித்து தன் கருத்தினை கூறியுள்ளார்
முக்கிய அம்சங்கள்:
ராமதாஸ் -சசிகலா கூட்டணி
ஓபிஎஸ் கருத்து
ராமதாஸ் தரப்பு, தவெகமற்றும் சசிகலா என இவர்கள் மூவரும் கூட்டணி அமைப்பார்கள் என்றே கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோர் மட்டுமே கூட்டணி அமைத்துள்ளனர். தவெக தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளனர். இந்நிலையில் சசிகலா மற்றும் ராமதாஸ் கூட்டணி குறித்து ஓபிஎஸ் தன் கருத்தை கூறியுள்ளார். சமீபத்தில் திமுகவில் இணைந்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார் ஓபிஎஸ்.
இதனைத்தொடர்ந்து தேர்தல் பரப்புரை வேலைகளில் ஓபிஎஸ் பிசியாக இருக்கின்றார். தற்சமயம் தனது சொந்த தொகுதிகளில் திமுகவிற்காக பரப்புரை செய்து வருகின்றார் ஓபிஎஸ். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் சசிகலா மற்றும் ராமதாஸ் கூட்டணி குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ் ,நான் அதிகமாக அம்மா ஜெயலலிதா அவர்களுடன் தான் பயணித்து இருக்கின்றேன். சின்னம்மா சசிகலா அவர்களும் ராமதாஸ் ஐயா அவர்களும் கூட்டணி அமைத்திருக்கின்றனர்.
சசிகலாவின் புதிய கட்சியுடன் ராமதாஸ் தரப்பு கூட்டணி வைத்திருக்கின்றனர். கூட்டணி அமைத்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றனர். எனவே மக்களின் தீர்ப்பை பொறுத்து தான இக்கூட்டணியின் நிலைப்பாடு என்ன என்பது தெரிய வரும். அதுவரை இக்கூட்டணி குறித்து எந்த கருத்தும் சொல்ல முடியாது. மக்கள் தீர்ப்பு சொல்லட்டும்.அதன் பிறகே இக்கூட்டணி குறித்து தெரிய வரும் என்றார் ஓபிஎஸ்.
இந்நிலையில் சசிகலா மற்றும் ராமதாஸ் தரப்பு கூட்டணி அமைந்திருப்பதால் யாருடைய வாக்கு பிரியும் என்ற விவாதங்களும் போய்க்கொண்டு இருக்கின்றன. சசிகலா மற்றும் ராமதாஸ் கூட்டணி இணைந்திருப்பதால் அன்புமணிக்கும் டிடிவி தினகரனுக்கு ஏதேனும் பின்னடைவு ஏற்படுமா என்ற யூகத்தில் சிலர் பேசி வருகின்றனர். ஆனால் அவர்களை பொறுத்தவரை எந்த கூட்டணியாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாதிப்பு வராது என்றே சொல்கின்றனர்.
தவெக கட்சியால் திமுகவின் வாக்கு தான் பிரியும், அதனால் எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என முன்பு டிடிவி தினகரன் கூறினார். அதனைத்தொடர்ந்து ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோரின் கூட்டணியால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குகள் தான் பிரியும் என்கின்றனர் திமுக ஆதரவாளர்கள்.
அதிமுக – தவெக கூட்டணியும் அமையலாம்..! ஆனால் இது நடக்கணும் – லோகேஷ் பேட்டி
இவ்வாறு ராமதாஸ் மற்றும் சசிகலா கூட்டணி குறித்து பல கருத்துக்கள் உலா வந்துகொண்டு இருக்க ஓபிஎஸ் அவர்களோ, தேர்தலை சந்திப்பு மக்களின் மதிப்பெண்ணை பொறுத்து தான் இக்கூட்டணியின் நிலைப்பாடு என்ன என்று தெரிய வரும் என கூறியிருக்கின்றார். இந்நிலையில் ராமதாஸ் மற்றும் சசிகலா கூட்டணியின் தொகுதிப்பங்கீடு எப்படி இருக்கும், இக்கூட்டணியில் மேலும் சிலர் இணைய வாய்ப்பிருக்கிறதா ? முதல்வர் வேட்பாளர் யாராக இருப்பார் ? என்ற பல கேள்விகள் இருக்கின்றன. அதற்கெல்லாம் விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
