திமுகவில் இணைந்த ஓபிஎஸ் போடிநாயக்கனுர் தொகுதியில் போட்டியிடுகின்றார். முதல் முறையாக திமுக சார்பாக போட்டியிடும் ஓபிஎஸ் அதுகுறித்து தன் கருத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார்
முக்கிய அம்சங்கள்:
திமுக சார்பாக போட்டியிடும் ஓபிஎஸ்
வெற்றிவாய்ப்பு பிரகாசம் என பேச்சு
கட்சியில் இணைந்ததை தொடர்ந்து திமுகவிற்கு பிரச்சாரம் செய்ய துவங்கினார் ஓபிஎஸ். குறிப்பாக தென் மாவட்டங்களில் திமுகவிற்காக ஆதரவு திரட்டி பேசி வந்தார். அந்த சமயத்தில் திமுகவில் ஏதேனும் பதவி கொடுக்கப்படுமா ? தொகுதி ஒதுக்கப்படுமா ? என்றெல்லாம் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு நான் திமுகவில் ஒரு தொண்டராக தான் இணைந்திருக்கின்றேன்.
எந்த ஒரு பதவியை எதிர்பார்த்தோ திமுகவில் இணையவில்லை என்றார் ஓபிஎஸ். ஆனால் அதையும் மீறி முதல்வர் முக ஸ்டாலின் தனக்கு தொகுதி கொடுத்தால் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றார். இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்ததை போல ஓபிஎஸ் அவர்களுக்கு போடிநாயக்கனுர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது மகனுக்கு எந்த தொகுதியும் ஒதுக்கவில்லை.
இருப்பினும் அவர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தார். இதனைத்தொடர்ந்து முதல்முறையாக திமுக சார்பாக ஓபிஎஸ்களமிறங்குகிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், போடிநாயக்கனுர் சட்டமன்ற தொகுதியில் திமுகவிற்கும் அக்கட்சி சார்பாக போட்டியிடும் எனக்கும் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. போடிநாயகனுர் தொகுதி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு சிறப்பாக உள்ளது.
மதசார்பற்ற திமுக கூட்டணி கண்டிப்பாக வெற்றிபெறும். தளபதி முக ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதலமைச்சராவது உறுதி என பேசினார் ஓபிஎஸ். அவர் சொல்வதை போல போடிநாயகனுர் தொகுதி ஓபிஎஸ் அவர்களுக்கு சாதகமாகவே தான் இருக்கின்றது. அவரால் திமுகவின் செல்வாக்கு தென்மாவட்டங்களில் அதிகரித்து வருகின்றது என்று தான் சொல்லவேண்டும்.
எப்போது ஓபிஎஸ் திமுகவில் வந்து இணைந்தாரோ அப்போதே தென் மாவட்டங்களில் திமுகவின் செல்வாக்கு அதிகரிக்க துவங்கியதாக திமுகவினர் கருதி வருகின்றனர். ஏற்கனவே வலுவாக இருக்கும் திமுக ஓபிஎஸ் வருகைக்கு பிறகு மேலும் வலுவடைந்து இருப்பதாகவே திமுகவினர் சொல்கின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான மக்களும் இதே கருத்தை தான் முன் வைத்து வருகின்றனர்.
ஓ Panneerselvam திமுகவில் இணைவாரா? முன்னாள் MLA Subburathinam முக்கிய தகவல்!
மறுபக்கம் அதிமுகவினர் தொடர்ந்து ஓபிஎஸ் ஐ கடுமையாக விமர்சனம் செய்வதையும் நிறுத்தவில்லை. அதிமுகவிற்கு ஓபிஎஸ் மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார் என அவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனாலும் என்னதான் ஓபிஎஸ் மீது அதிமுகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தாலும் போடிநாயக்கனுர் தொகுதியில் ஓபிஎஸ் வெற்றிவாய்ப்பு மிகவும் பிரகாசமாகவே இருப்பதாக கணிக்கப்பட்டு வருகின்றது. இதனைத்தொடர்ந்து இனி தென் மாவட்டங்களில் திமுகவிற்காக பரப்புரை செய்வதை ஓபிஎஸ் தீவிரப்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
