P .chidambaram About Admk,பொம்மலாட்டத்தில் பொம்மை முக்கியமல்ல..நூல் யார் கையில் என்பது தான் முக்கியம்..அதிமுக -பாஜக கூட்டணி பற்றி பா.சிதம்பரம் – former minister p.chidambaram about admk and bjp alliance

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து திமுகவை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் தன் விமர்சனங்களை பதிவு செய்திருக்கின்றார்

முக்கிய அம்சங்கள்:

அதிமுக -பாஜக கூட்டணி

பா.சிதம்பரம் விமர்சனம்

p.chidambaram about admk -bjp
திமுகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அதிமுக கூட்டணியை விமர்சித்து வருகின்றனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காக திமுகவினர் அதிமுகவை தொடர் விமர்சனம் செய்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சியினரும் அதிமுகவை இதற்காக விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜகவின் பிடியில் அதிமுக இருப்பதாகவும், சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு அதிமுகவை பாஜக காலி செய்து விடும் என்றெல்லாம் விமர்சனங்கள் போய்க்கொண்டு இருக்கின்றன.இப்படியான விமர்சனங்கள் போய்க்கொண்டு இருக்கும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். தொகுதிப்பங்கீடு தொடர்பாக இந்த சந்திப்பு நடந்ததாக தெரிகின்றது. கூட்டணியை பிரித்துக்கொடுக்க வேண்டிய அதிமுக கட்சியே தற்போது டெல்லிக்கு சென்று தொகுதிப்பங்கீடு குறித்து பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இதையெல்லாம் பார்த்தால் பாஜகவின் பிடிப்பில் அதிமுக முழுமையாக இருப்பதாக தெரிவதாக பலர் கூறி வருகின்றனர். ஏற்கனவே திமுகவை சேர்ந்தவர்கள் அதிமுக பாஜகவிற்கு அடிமையாக இருப்பதாக பேசி வர தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் இந்த டெல்லி பயணம் மேலும் விமர்சனங்களை அதிகப்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் இதுகுறித்து அடுத்தடுத்து பலர் தங்களின் கருத்துக்களை கூறி விமர்சனம் செய்து வரும் நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து தன் கருத்தினை கூறியிருக்கின்றார். அவர் குறித்து என்னவென்றால், அதிமுகவினர் டெல்லிக்கு பயணம் செய்யும்போதே தெரிய வேண்டாமா ? இவர்களின் கூட்டணிக்கு யார் தலைமை என்று.அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு தலைமை பாஜக தான்.
வெறும் ஒப்புக்காக அதிமுக தான் தலைமை என்கின்றனர். ஆனால் உண்மையில் பாஜக தலைமையில் தான் இந்த கூட்டணி இருந்து வருகின்றது. பொம்மலாட்டம் நிகழ்ச்சியில் பொம்மை முக்கியமல்ல, பொம்மையை ஆட்டிவைக்கும் நூல் யார் கையில் இருக்கின்றது என்பது தான் முக்கியம் என கூறியுள்ளார் பா.சிதம்பரம். இதன் மூலம் அவர் ,அதிமுகவை பொம்மையாகவும், அந்த பொம்மையை ஆட்டிவைக்கும் நூல் தான் பாஜக என்றும் சொல்லாமல் சொல்லியிருக்கின்றார் பா.சிதம்பரம்.
இவ்வாறு அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து தன் விமர்சனங்களை முன் வைத்திருக்கின்றார் பா.சிதம்பரம். இவரைப்போல தொடர்ந்து திமுகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அவர்களால் தொகுதியை பிரித்துக்கொடுக்க முடியவில்லை. அவ்வளவு ஏன் அவர்களுக்கான தொகுதியையே பிரித்துக்கொள்ள முடியவில்லை என திமுகவினர் கூறி வருகின்றனர்.
ஆனால் ஒரு மாநில கட்சி தலைவர் தேசிய கட்சி தலைவருடன் சந்திப்பை நடத்துவது சாதாரண விஷயம் தான். இதை ஏன் திமுகவினர் பெரிதாக பேசுகின்றனர் என தெரியவில்லை என்று பாஜகவை சேர்ந்த தமிழிசை பதிலளித்திருக்கிறார். ஆனால் திமுகவினர் மட்டுமல்ல பொதுவானார்கள் சிலரும் இதே கருத்தை தான் முன் வைத்து வருகின்றனர். பாஜக தான் அதிமுகவை இயக்கி வருவதாக சிலர் கருதுகின்றனர். இதற்கெல்லாம் பதிலடி தரும் வகையில் அதிமுகவினர் என்ன செய்ய போகின்றனர் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

திமுக கூட்டணியில் தேமுதிக…மக்கள் கருத்து இது தான்?

இதனிடையில் மிக விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விரைவில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.