Puducherry Anbazhagan About Edappadi Palanisamy,புதுச்சேரியில் அதிமுக அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பை எடப்பாடி பழனிச்சாமி ஏற்படுத்திக்கொடுப்பார் : அன்பழகன் – puducherry admk anbazhagan met edapaddi palanisamy and thanked him

புதுசேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அதிமுக இரண்டு தொகுதிகளை பெற்றுள்ளனர். இரண்டு தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சரவையில் இடம்பெறுவோம் என எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு பேசினார் அன்பழகன்

முக்கிய அம்சங்கள்:

இரண்டு தொகுதியிலும் வெற்றி

அமைச்சரவையில் இடம்பெறுவோம் என்றார் அன்பழகன்

puducherry anbazhagan
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதிப்பங்கீடு இறுதியடைந்துள்ளது. என்னதான் சில சர்ச்சைகள் இருந்து வந்தாலும் கடைசியில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டு இக்கூட்டணி மீண்டும் அமைந்துவிட்டது. இடையில் லட்சிய ஜனநாயக கட்சியின் வருகையை முதலமைச்சர் ரங்கசாமி ஏற்கவில்லை. அதனால் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறும் சூழல் நிலவி வருவதாக எல்லாம் சொல்லப்பட்டது.ஆனால் ரங்கசாமியிடம் பாஜகவினர் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முடிவை எடுத்தார்கள். இதனைத்தொடர்ந்து தொகுதிகளும் பிரிக்கப்பட்டன. புதுச்சேரியில் இருக்கும் 30 தொகுதிகளில் ரங்கசாமியின் என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும் பாஜகவிற்கு பத்து தொகுதிகளும் மீதமுள்ள நான்கு தொகுதிகளை லட்சிய ஜனநாயக கட்சி மற்றும் அதிமுகவிற்கு தலா இரண்டு தொகுதிகளும் பிரித்துக்கொடுக்கப்பட்டன.
புதிதாக இக்கூட்டணியில் இணைந்த ஜோஸ் சார்லஸ் மார்டினின் லட்சிய ஜனநாயக கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கிய நிலையில் அதிமுகவிற்கும் இரண்டே தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டன. இதுகுறித்து அதிமுக ஆதரவாளர்கள் அதிருப்தியை தெரிவித்த வண்ணம் இருக்க அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் கொடுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய அதிமுக அன்பழகன் , புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி எங்களுக்கு இரண்டு தொகுதிகளை வழங்கியுள்ளனர். இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பினை பெற்று கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எனது நன்றிகள். புதுச்சேரியில் உப்பளம் தொகுதியில் நானும், உருளையன்பேட்டை தொகுதியில் காந்தி அவர்களும் போட்டியிடுகின்றோம். இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து நன்றியினை தெரிவித்தோம்.
இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். தேசிய ஜனநாயக கூட்டணி புதுச்சேரியில் ஆட்சியமைக்கும். அதன் பிறகு அமைச்சரவையில் அதிமுகவை இடம்பெறும் வாய்ப்பினை எங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஏற்படுத்திக்கொடுப்பார்கள் என்றார் அன்பழகன். குறைந்த தொகுதியில் வென்றால் கூட அமைச்சரவையில் இடம்பெறலாம் என நம்பிக்கை தெரிவித்தார் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் .
சில மாநிலங்களில் குறைவான தொகுதிகளை வென்றவர்களை கூட பாஜக முதலமைச்சர் பதவியை கொடுத்திருக்கின்றனர். 55 தொகுதிகளில் வெற்றிபெற்ற நிதிஷ் குமாரை கூட பாஜக தான் முதலமைச்சராக்கினார்கள். ஆனால் தமிழகத்தில் தங்களது கூட்டணி கட்சிகளை விழுங்கி வருகின்றனர் திமுகவினர். திமுகவை எதிர்த்து உருவாக்கப்பட்ட கட்சி தான் வைகோவின் மதிமுக.
அந்த கட்சி எங்களுடன் கூட்டணி வைத்தபோது ஜெயலலிதா அவர்கள் ஆறு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பினை கொடுத்தார்கள். அதுவும் தனி சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார்கள். ஆனால் அதே மதிமுகவிற்கு தற்போது திமுக வெறும் நான்கே தொகுதிகளை தான் வழங்கியிருக்கின்றனர். இதுபோல கூட்டணி காட்சிகளை விழுங்கக்கூடிய கட்சி தான் திமுக.
ஆனால் பாஜகஅப்படி இல்லை.கூட்டணி கட்சிகளை வளர்ந்துவிடும் கட்சி என கூறியிருக்கின்றார் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன். இந்நிலையில் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்று அமைச்சரவையில் கண்டிப்பாக இடம்பெறுவோம் என நம்பிக்கையுடன் பேசி வருகின்றார் அன்பழகன்.

ஒன்றுபட்ட அதிமுக- எடப்பாடி பழனிசாமி என்ன நினைக்கிறார்? ராம சீதாபதி பேட்டி!

ஆனால் அது சாத்தியமா ? என்பது தான் ஒரு சில புதுச்சேரி மக்களின் கேள்வியாக இருந்து வருகின்றது. புதுச்சேரி அரசியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வந்த நிலையில் இந்த தேர்தலில் என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.