இந்நிலையில் புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். வாக்கு வங்கிகளை பொறுத்து தான் கட்சிகளுக்கு சீட் கொடுக்க முடியும். புதிய தமிழகம் கட்சி 33 தொகுதிகளில் போட்டியிட்டு 33 ஆயிரம் வாக்குகள் தான் பெற்றுள்ளனர். மேலும் கிருஷ்ணசாமி என்னிடம் கூட்டணி தொடர்பாக நேரடியாக பேசவில்லை என்றும் குறிப்பிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்நிலையில் தான் கிருஷ்ணசாமிஎடப்பாடி பழனிசாமியை இரண்டு முறை கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சந்தித்தேன் என கூறியிருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே நாங்கள் விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலின் மூலம் சிறப்பான ஆட்சியை கொண்டு வரவே நினைத்தோம்.
அதன் காரணமாக தான் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டில்,, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முறை வர வேண்டும் என கூறினேன். அப்படி ஒரு மாற்றம் தமிழகத்தில் வர வேண்டும். அதற்காக புதிய தமிழகம் கட்சி முயற்சி செய்யும் என கூறினேன். அதன் அடிப்படையில் தான் அதிமுக கூட்டணியில் இணைய நினைத்தோம்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிஅவர்களின் இல்லத்திற்கே சென்று இரண்டு முறை சந்தித்தேன். அதோடு மட்டுமல்லாமல் அமைச்சர் வேலுமணியையும் சந்தித்து பேசியிருந்தேன். இதுபோன்ற பல சந்திப்புகள் நடைபெற்றது.ஆனாலும் எங்கள் கூட்டணி அமையவில்லை. அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என அவர் கூறியிருக்கின்றார்.
அவர் ஏன் அப்படி பேசினார் என தெரியவில்லை. இருப்பினும் எங்களை பொறுத்தவரை தமிழக மக்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்படியான ஆட்சி அமைய வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் கிடைக்க வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டும் என்பது போன்ற நோக்கங்களோடு நாங்கள் செயல்படுகின்றோம் என்றார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி.
இதனைத்தொடர்ந்து தற்போது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகும். கண்டிப்பாக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் வெளியாகும்.60 முதல் 70 தொகுதிகள் வரை போட்டியிடுவோம் என்றார் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி.
இந்நிலையில் கிருஷ்ணசாமி எடப்பாடி பழனிசாமியை இருமுறை சந்தித்ததாக பேசியுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, அவர் நேரடியாக என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கூறியிருக்கின்றார். இவ்வாறு இவர்கள் இருவரின் பேச்சிலும் முரண் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
