"என்ன கருமம் டா இது" BSNL இயக்குநருக்கு உள்ளாடை, செருப்பு எடுத்து தர 50 அதிகாரிகள் நியமனம் 

பொதுதுறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லில் மூத்த இயக்குநராக பணியாற்றுபவர் விவேக் பன்சால். இவர் இன்றும், நாளை என இரு தினங்கள்  உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.  அங்கு திரிவேணி சங்கத்தில் புனித நீராடுதல், கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில்  அவர் குடும்பத்துடன் பங்கேற்க இருந்தார். 

இதற்காக, பன்சாலின் பயண ஏற்பாடுகளை செய்து கவனிக்க 50 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 50 அதிகாரிகளுக்கு தலா 20 விதமான பொறுப்புகள் வழங்கப்பட்டு இருந்தன. திரிவேணி  சங்கமத்தில் பன்சால் குளிக்க செல்லும் போது அவருக்கு தேவையான துண்டு, உள்ளாடை, செருப்பு, சீப்பு, கண்ணாடி, எண்ணெய் பாட்டில் போன்றவற்றை தயாராக வைத்திருப்பதாக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு இருந்தார்.

விவேக் பன்சாலுக்கான வாகனங்கள் புதிய துண்டு போட்டு தயாராக வைத்திருக்க வேறொரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படி விவேக் பன்சாலுக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொருவருக்கும் என்ன மாதிரியான பொறுப்புகள் என்ற விவரங்கள் அடங்கிய பட்டியல் சோசியல் மீடியாக்களில் வைரல் ஆனது. 

இது குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு,  இது அபத்தமானது, அதிர்ச்சியானது என பதிலளித்துள்ளார். மேலும்  விவேக் பன்சாலின் உபி பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் விளக்கம் கேட்டு அவருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Source link