Rajenthira Balaji Campaign,இந்தியா ஆன்மீகபூமியாக வளர தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்.. : ராஜேந்திர பாலாஜி – former minister rajenthira balaji about admk and bjp bond in his sivakasi campaign

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான நாள் நெருங்கிக்கொண்டு வருகின்றது. அனைத்து கட்சிகளும் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பரப்புரையில் போது காரசாரமாக பலதரப்பட்ட கருத்துக்கள் பரிமாறப்படும் வருகின்றன. அதன் காரணமாக சில பல சர்ச்சைகளும் எழுகின்றன. இப்படி தான் சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. முதலமைச்சர் முக ஸ்டாலின் குறித்தும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி பேசியது கண்டனங்களை பெற்று வருகின்றது.

இந்நிலையில் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பரப்புரை செய்து வருகின்றார். அந்த பரப்புரையில் அதிமுக மீண்டும் ஏன் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது குறித்து பேசியிருக்கிறார்.

அவர் கூறியது, தமிழகத்தில் அதிமுகஆட்சி அமைய வேண்டும். டெல்லியில் மோடி இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எடப்பாடி இருக்க வேண்டும். அதுதான் இந்தியாவிற்கு உகந்த நிலையாகும். இந்தியா ஆன்மீகபூமியாக வளர தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்திட வேண்டும். பொய்ச்சொல்லி ஏமாற்றி ஆட்சி நடத்தும் திமுகவை வீட்டிற்கு அனுப்பவேண்டும், உங்களுக்காகவே உழைத்துக்கொண்டு இருக்கும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குங்கள்.

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்களுக்காக பல திட்டங்களை அறிவித்திருக்கிறார். அந்த திட்டங்களை எல்லாம் ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்துவார். சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் அதிமுக நிறைவேற்றி கொடுக்கும். இதற்கு முன்பு எங்கள் ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கின்றோம். திருமண உதவிக்கு பணம் ,தாலிக்கு தங்கம் போன்ற அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றினோம்.

ஆனால் இப்பொழுது எந்த திட்டமாவது செயல்படுகிறதா ? தாலிக்கு தங்கத்தை நிறுத்திவிட்டார்கள். மேலும் எங்கள் வாக்குறுதிகள் குறித்து ஸ்டாலின்கேள்விகேட்கின்றார். இதையெல்லாம் இவர்கள் செய்ய முடியுமா ? என கேட்கின்றார். மத்திய அரசை பகைத்துக்கொண்டு தமிழகத்தை கடனாளியாக்கிவிட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்தரை லட்சம் கோடி தமிழகத்திற்கு கடன் உள்ளது. எங்களது ஆட்சியில் மக்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தியபோதும் இந்தளவிற்கு கடன் இல்லை.

மத்திய அரசுடன் நல்ல உறவில் இருக்கும் கட்சி தான் அதிமுக. எனவே கண்டிப்பாக சொன்ன திட்டங்களை எல்லாம் செய்துகொடுப்போம். பிரதமர் மோடியிடம் தேவையான நிதியை பெற்று மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவோம் என பேசினார் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதாக கூறி விமர்சித்து திமுகவினர் பேசி வருகின்றனர். ஆனால் அதிமுகவை சேர்ந்தவர்களோ, மத்திய அரசும் மாநில அரசும் நட்புறவில் இருந்தால் தான் அந்தந்த மாநில மக்களுக்கு நன்மை என்கின்றனர்.

தற்போது ராஜேந்திர பாலாஜி கூட இதே கருத்தை தான் கூறியுள்ளார். மத்திய அரசுடன் நட்புறவில் இருக்கின்றோம். கண்டிப்பாக மோடியிடம் பேசி தேவையான நிதியை வாங்கி தமிழக மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவோம் என கூறியுள்ளார். ஆனால் திமுகஅரசு மத்திய அரசை பகைத்து கொண்டு தமிழகத்தை கடனாளியாக்கிவிட்டார்கள் என்கின்றார்.

ஒருபக்கம் முதலமைச்சர் முக ஸ்டாலின் உட்பட திமுகவினர் அனைவரும் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. வேண்டுமென்றே பழிவாங்குகின்றனர் என்கின்றனர். மறுபக்கம் மத்திய அரசுடன் நட்புறவில் இருக்கின்றோம். கண்டிப்பாக மக்களுக்கு நல்லது செய்வோம் என அதிமுகவினர் சொல்கின்றனர். அதே சமயம் தமிழகத்தில் அதிமுக வெற்றிபெற்றால் பாஜக தான் ஆட்சி நடத்தும் என சொல்லியும் திமுக விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் உண்மையை சொல்லப்போனால் மத்திய அரசும் மாநில அரசும் நட்புறவில் இருந்தால் கண்டிப்பாக பல நன்மைகள் வந்து சேரும் தான். அதைச்சொல்லி தான் அதிமுகவினர் வாக்கு கேட்டு வருகின்றனர். ஆனாலும் திமுக தரப்பு சொல்வதையும் மக்கள் எண்ணி பார்க்கின்றனர். இவ்வாறு இரு தரப்பினரும் வெவ்வேறு காரணங்களை சொல்லி வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

இந்திய தேர்தல்களில் பாஜகவின் தொடர் வெற்றிக்கு காரணம் என்ன? மக்கள் கருத்து

குறிப்பாக திமுக ஆட்சியில் நாங்கள் செயல்படுத்திய திட்டமே எங்களுக்கு வெற்றியை தேடி தரும் என முக ஸ்டாலின் பெருமையாக சொல்கின்றார். மத்திய அரசின் உதவி இல்லாமலே இத்தனை திட்டங்களை திமுக நிறைவேற்றியிருப்பதாக அவர்கள் சொல்கின்றனர். எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு மக்கள் என்ன முடிவு எடுக்கப்போகின்றார்கள் என்பது மே நான்காம் தேதி தெரிய வரும்.

Source link