Sasikala About Udhayanidhi Stalin And Edappadi Palanisamy,உதயநிதி ஸ்டாலின் சொன்னது உண்மைதானே..நடந்ததை தானே சொல்றாரு : எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த சசிகலா – sasikala about her view on edapaadi palanisamy and udhayanidhi stalin campaign

எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்து பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் சசிகலா தனது கருத்தினை பதிவு செய்திருக்கின்றார்

முக்கிய அம்சங்கள்:

எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை

சசிகலா விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை தான் தற்போது பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. கடந்தமுறை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செங்கலை வைத்துக்கொண்டு பரப்புரை செய்து அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். தற்போது ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக விமர்சித்து பரப்புரை செய்து வருகின்றார். அதைப்போல எடப்பாடி பழனிசாமியின் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடும் வகையில் விமர்சனம் செய்து வருகின்றார்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எல்லை மீறி விமர்சித்து வருவதாக கண்டனங்கள் எழுகின்றன. முதல்வர் கொரோனாவிலேயே போயிருக்கணும், பால்டாயில் குடித்ததெல்லாம் பன்ச் டைலாக் பேசுறாங்க என்பது போன்ற விமர்சனங்கள் கடும் கண்டனங்களை பெற்று வருகின்றன. பலர் பேசி வரும் நிலையில் தற்போது சசிகலா தனது கருத்துக்களை கூறி வருகின்றார்.