Sathankulam Case Advocate,மேல்முறையீட்டிற்கு சென்றாலும் இதே தீர்ப்பு தான்..சாத்தான்குளம் வழக்கு தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்ட விஷயங்களை எடுத்து கூறிய வழக்கறிஞர் – advocate spoke about judge declaration on sathankulam case verdict

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மற்றும் மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ஒன்பது காவலர்களுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் இந்த தீர்ப்பு குறித்து பேசியிருக்கிறார்.

அவர் பேசியது, இந்த வழக்கில் தொடர்புடைய ஒன்பது பேருக்கு இரட்டை மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பென்னிக்ஸ் தாயாருக்கு தண்டனை பெற்றவர்கள் இழப்பீடாக ஒட்டுமொத்தமாக ஒரு கோடியே நாற்பது ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இரட்டை மரணதண்டனையை சேர்ந்து இழப்பீடு வழங்கவும் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் இவர்கள் இழப்பீடு கொடுக்க தாமதமானால் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என நீதிபதி கூறியிருக்கின்றார்.

மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருமையான கருத்துக்களை கூறியிருக்கின்றார். இந்த வழக்கு எந்தளவிற்கு அரிதான வழக்கு என்பதனையும் பார்க்க வேண்டும். கொலை செய்யப்பட்டவர்கள் எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல் இருந்துள்ளனர். ஆனால் இவர்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே தாக்கியிருக்கின்றனர். மக்களுக்கு உதவ கூறிய காவல்துறையினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே இது அரிதிலும் அரிதான வழக்காக தான் பார்க்க வேண்டும். காவல்துறையினர் கஸ்டடியில் யாரையாவது துன்புறுத்தினார்கள் என்றால் அந்த காவலர்களுக்கு அதிகப்படியான தண்டனை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லியிருக்கிறது. தற்போது மத்திய அரசின் ரிப்போர்டையும் நீதிபதி வாசித்தார். மத்திய அரசும் இவர்களுக்கு அதிகப்படியான தண்டனையை வழங்குமாறு கூறியதாக நீதிபதி சொன்னார்.

தமிழக அரசின் குறிப்புரையில் A1 மற்றும் A3ஆகியோர் மீது வழக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் எங்கள் மீது எந்த வழக்கும் இல்லை என சொன்னார்கள். மத்திய அரசு போல தமிழக அரசும் இவர்களுக்கு கருணை காட்டாமல் உச்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என சொல்லியிருக்கின்றனர். மேலும் நீதிபதி, இது மனித கண்ணியத்தை மீறும் செயலாக உள்ளது. எனவே நீதிமன்றம் இதனை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.

இவர்கள் திருந்துவதற்கான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என எண்ணவில்லை. எனவே இவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளத. .இந்த குற்றத்தை கொடூரமான குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மட்டும் தலையிடவில்லை என்றால் கொலை செய்யப்பட்டவர்களின் உடலை அடக்கம் செய்யப்படும் முன்பே இவர்களுக்கு தண்டனை கிடைத்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலை செய்தவர்கள் படித்தவர்கள், நல்ல மனநிலையில் இருந்தவர்கள். இவர்கள் இவ்வாறு செய்தது மன்னிக்கமுடியாத ஒன்று என நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மேல் அதிகாரிகள் கூறியதால் தான் இதனை செய்தோம் என குற்றம் செய்தவர்கள் சிலர் சொன்னார்கள். அனால் இதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இரவு முழுவதும் அவர்களை துன்புறுத்தி அடித்து கொலை செய்துள்ளனர். இந்த செயலை பார்க்கும்போது மனமே வெந்துபோய்விடும்போல இருக்கின்றது என நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும் இவர்களுக்கு ஆயுள் தண்டனை மட்டும் போதுமானதாக இருக்காது. ஒரு குடும்பத்தின் ஆணிவேரையே சிதைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை தானே கொடுப்பார்கள், 14 வருடங்களில் வெளியே வந்துவிடலாம் என அவர்கள் நெனைக்ககூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினால் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இதற்காக மத்திய மாநில அரசிற்கு எங்களது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார் வழக்கறிஞர்.

இந்நிலையில் இந்த வழக்கில் அவர்கள் மேற்முறையீடு சென்றாலும் இதே தீர்ப்பு தான் கிடைக்கும். இதுதான் கடைசி தீர்ப்பாக இருக்கும். மாநில அரசும் மத்திய அரசும் ஒரே கருத்தை தான் பதிவு செய்திருக்கின்றனர். இவர்கள் உயர்நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை எடுத்து சென்றாலும் ஜாமீன் கூட கொடுக்கப்படமாட்டாது.

Seeman: நீதிபதிகள் அரசியல் வாதியாக செயல் பட சொல்லும் தீர்ப்பு!

இந்நிலையில் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளில் முதல் ஐந்து பேருக்கு தான் தூக்கு தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அனைவருக்குமே மரண தண்டனை விதித்தார் நீதிபதி. இது சிறப்பான தீர்ப்பு என கூறினார் பாதிக்கப்பட்டோர் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்.

Source link