Seeman About Velmurugan,இந்த தேர்தலில் வாய்ப்பில்லை..எதிர்காலத்தில் பார்க்கலாம்..வேல்முருகனுடன் கூட்டணியா ? என்ற கேள்விக்கு சீமான் பதில் – seeman about the possibilities of joining hands with velmurugan

திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகனின் தவாக கட்சி வெளியேறினார்கள். இதனைத்தொடர்ந்து அவர்கள் சீமானுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாக சில பேச்சுக்கள் போய்க்கொண்டு இருந்தது. இதுகுறித்து சீமான் விளக்கம் கொடுத்துள்ளார்

முக்கிய அம்சங்கள்:

வேல்முருகனுடன் கூட்டணியா ?

சீமான் பேச்சு

seeman about velmurugan
திமுக கூட்டணியிலிருந்து வேல்முருகனின் தவாக விலகிவிட்டனர். கடைசி நேரம் வரை தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு அவர்களுக்குள் எட்டப்படவில்லை. மேலும் வேல்முருகன் வைத்த கோரிக்கைகளையும் திமுக நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி கொடுக்கவில்லை என்பதன் காரணமாக இக்கூட்டணி பிரிந்தது. திமுக இந்த தேர்தலில் தவாகவிற்கு ஒரு தொகுதியை வழங்கியிருக்கின்றனர். இதனால் வேல்முருகன் கடும் அதிருப்திக்கு ஆளானார்.அதனைத்தொடர்ந்து பத்து கோரிக்கைகளை வேல்முருகன் திமுகவிற்கு வைத்தார். அதையும் அவர்கள் நிறைவேற்றி தருவதாக கூறவில்லை என்பதால் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துவிட்டார். என்னதான் அவரிடம் திமுக சார்பாக ஒரு சிலர் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டாலும் வேல்முருகன் தான் எடுத்த முடிவில் நிலையாக இருக்கின்றார்.
மேலும் இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும், எனது கட்சி நிர்வாகிகளை களமிறக்க இருப்பதாகவும் பேசினார் வேல்முருகன். இதைத்தொடர்ந்து திமுக மீது தொடர் விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றார் வேல்முருகன். திமுகவில் அமைச்சர்களே அந்த கட்சியின் செயலாளர்களை பார்க்க முடியாது. பலமணி நேரம் காத்திருந்து தான் செயலாளர்களை பார்க்க முடியும். அந்த நிலை அக்கட்சியின் அமைச்சர்களுக்கே உள்ளது என அடுக்கடுக்காக திமுகவை விமர்சித்தார் வேல்முருகன்.
இவரின் இந்த விமர்சனங்களுக்கு திமுக அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். இந்த குற்றசாட்டை சில மாதங்களுக்கு முன்பு வேல்முருகன் சொல்லியிருந்தால் இதுகுறித்து பேசலாம். ஆனால் தற்போது அவர் கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்பதால் அவர் பேசுகின்றார் என்றார் சிவசங்கர். இவ்வாறு வேல்முருகன் தொடர்ந்து திமுகவை விமர்சனம் செய்கின்றார்.
இப்படியான நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தவாக வேறு ஏதேனும் கட்சியின் கூட்டணி வைப்பார்களா ? இல்லை தனித்து போட்டியிடுவார்களா ? என பேசப்பட்டு வருகின்றது. கிட்டதட்ட வேல்முருகனின் கருத்துக்களும் சீமானின் கருத்துக்களும் ஒருமித்தமாக இருப்பதால் அவர்கள் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
இதைப்பற்றி சீமான் கூறியது என்னவென்றால், இந்த தேர்தல் முடிவடைய போகின்றது. தேர்தலுக்கான வேலைகள் எல்லாம் நடந்து வருகின்றது. ஒவ்வொரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நியமித்து வேலை செய்து வருகின்றோம். எனவே இப்போ இந்த கேள்வியை கேட்க கூடாது. வேண்டுமானால் எதிர்காலத்தில் இதுகுறித்து சிந்திக்கலாம். ஆனால் இந்த தேர்தலில் கூட்டணி கிடையாது என கூறினார் சீமான்.
மேலும் தவாக வேல்முருகனின் ஆதரவு சீமானுக்கு கிடைக்குமா ? என்ற கேள்வியும் எழுகின்றது. ஆனால் அவர் தனித்து போட்டியிடும் வேலைகளில் இருக்கின்றார்கள். அவர்களின் வலிமையை காட்ட தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றனர். எனவே அவர் வெல்ல நான் வாழ்த்துவேன், நான் வெற்றிபெற அவர் என்னை வாழ்த்துவார் என்றார் சீமான். இதன் மூலம் ஒருவேளை சீமான்மற்றும் வேல்முருகன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதோ என்ற பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

திமுக சொல்லி தான் சீமான் பேசுகிறாரா? அபுபக்கர் பேட்டி

இந்நிலையில் சீமான் தனது தேர்தல் பரப்புரை வேலைகளை துவங்கியிருக்கின்றார். இம்முறையும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகின்றார் சீமான். அவரது பரப்புரையில் கல்வி, தண்ணீர், மருத்துவம் ஆகிய மூன்று விஷயங்கள் மற்றும் தான் இலவசமாக வழங்குவேன். மற்றபடி பணம் கொடுத்து வாக்கு வாங்கும் எண்ணம் இல்லை. நான் ஆட்சிக்கு வந்தால் மருத்துவம், கல்வி ,குடிநீர் ஆகிய மூன்று விஷயங்களை இலவசமாக தரமாக தருவேன் என கூறிவருகிறார் சீமான்.