Sellur Raju About Dmk Manifesto,திமுகவின் 8000 ரூபாய் கூப்பன் திட்டம்..செல்லூர் ராஜு கருத்து – former minister sellur raju about his view on dmk manifesto

திமுகவின் தேர்தல் அறிக்கைகள் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகள் திட்டம் பேசும்பொருளாக மாறியுள்ளது. இதைப்பற்றி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில் செல்லூர் ராஜு தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கின்றார்

முக்கிய அம்சங்கள்:

8000 ரூபாய் கூப்பன் திட்டம்

செல்லூர் ராஜு கருத்து

sellur raju about dmk manifesto
திமுகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. கனிமொழி தலைமையிலான குழு தயார் செய்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் முக ஸ்டாலின். பல திட்டங்களை தேர்தல் அறிக்கையாக திமுக வழங்கியிருக்கும் நிலையில் இல்லத்தரசிகளுக்கு 8000 ரூபாய் கூப்பன் திட்டம் தான் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதாவது வருமான வரி செலுத்தாத இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 8000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதிலும் இது மின்னணு கூப்பனாக வழங்கப்படுமாம். இந்த கூப்பனின் மூலம் பிரிட்ஜ்,வாஷிங் மிஷின் போன்ற வீட்டிற்கு பயன்படும் பொருட்களை தங்களுக்கு பிடித்த பிராண்ட்களில் வாங்கிக்கொள்ளலாமாம். இதெல்லாம் கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்வதற்கான முடிவாக பார்க்கப்படுகின்றது. அதாவது கடந்த காலங்களில் அரசு இலவசமாக தரும் பொருட்களில் அரசு எதிராக தரம் குறைவான பொருட்களை தயார் செய்து மற்றும் ஊழல் அரங்கேறியது தெரிய வந்துள்ளது.
அதனை தடுத்து நிறுத்தும் பொருட்டு தான் இந்த கூப்பன் திட்டம் இல்லத்தரசிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திட்டத்தை இல்லத்தரசிகள் வரவேற்கும் நிலையில் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிஇந்த திட்டத்தை மட்டுமல்லாமல் திமுகவின் ஒட்டுமொத்த தேர்தல் அறிக்கையும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பார்த்து காப்பி நடித்திருப்பதாக கூறுகின்றார்.
இதுகுறித்து அறிக்கையை வெளியிட்டு கடுமையாக விமர்சித்து இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவின் தேர்தல் அறிக்கையால் பதறிப்போன முக ஸ்டாலின் இதுபோல காப்பியடித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்றெல்லாம் விமர்சித்தனர் அதிமுகவினர். மறுபக்கம் இதற்கு திமுகவினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போதுஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுஇதுகுறித்து பேசியிருக்கிறார். அவர் பேசியது என்னவென்றால், 8000 கூப்பன் திட்டமெல்லாம் அதிமுகவிற்கு போட்டியாகவே தான் அறிவிக்கின்றனர். இருப்பினும் மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும். யார் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்ட திட்டங்களை நிறைவேற்றி தருவார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சொல்வதை தான் செய்வார், செய்வதை தான் சொல்வார் என்பதனை நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோவாக ஜொலித்துக்கொண்டு இருக்கின்றது. தேர்தல் அறிக்கைகளிலேயே அதிமுகவின் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன். மக்கள் மத்தியில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் எங்களுடைய தேர்தல் அறிக்கையை ஏற்றுக்கொண்டார்கள். இதன் மூலமே கண்டிப்பாக தமிழகத்தின் முதல்வராக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்பார் என்பதில் என மேலும் ஒருமுறை உறுதியாகியுள்ளது என்றார் செல்லூர் ராஜு.
இந்நிலையில் திமுகவினர் தங்களது தேர்தல் அறிக்கையை தான் ஹீரோ என்கின்றனர். மறுபக்கம் அதிமுகவின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ, திமுகவின் தேர்தல் அறிக்கை காமெடியாக தான் பார்க்கப்படுகின்றது என்கின்றனர் அதிமுகவினர். அதுமட்டுமல்லாமல் மாறி மாறி தேர்தல் அறிக்கைகளை காப்பியடித்து விட்டதாகவும் பேசி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மக்கள் இந்த தேர்தல் அறிக்கைகள் குறித்து என்ன நினைக்கின்றனர்.
யாருடைய தேர்தல் அறிக்கையை அவர்கள் ஏற்றுள்ளனர், ஏற்கனவே சொல்லப்பட்ட வாக்குறுதிகள் எந்தளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதனை பொறுத்தே வாக்குகளை செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே தேர்தல் அறிக்கைகள் குறித்து மக்களின் கருத்தை கேட்பது மிக முக்கியமான ஒரு விஷயமாக உள்ளது.

“பராசக்தியை வைத்து வாக்கு திரட்ட திமுக திட்டம்”- ஆதவ் அர்ஜுனா

ஆனால் திமுகவினர் கனிமொழி தலைமையிலான ஒரு குழுவை அமைத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தான் தேர்தல் அறிக்கையை தயார் செய்திருப்பதாக சொல்லப்படுகின்றது. எனவே கண்டிப்பாக அவர்கள் மக்களின் குறைகளை கேட்டறிந்து மக்களுக்கு தேவையான விஷயங்களை தான் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருப்பார்கள் என்பது திமுக ஆதரவாளர்களின் கருத்தாக உள்ளது.