Selvaperunthagai About Congress,திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஏன் கூடுதல் தொகுதிகள் ? செல்வப்பெருந்தகை விளக்கம் – congress tamil head selvaperunthagai about dmk alliance parties

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தொகுதிப்பங்கீடு குறித்து பேசியிருக்கிறார்.மேலும் தோழமை காட்சிகள் காங்கிரஸ் கட்சியை ஒப்பிட்டு பேசியது குறித்தும் செல்வப்பெருந்தகை தன் கருத்தினை கூறியிருக்கின்றார்

முக்கிய அம்சங்கள்:

காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பிடாதீர்கள்

செல்வப்பெருந்தகை பேச்சு

selvaperunthagai about dmk alliance parties
திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் சற்று இழுபறியான நிலை போய்க்கொண்டு இருப்பதாகவே தெரிகின்றது. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகளுக்கும் திமுகவிற்கும் இடையே தொகுதிப்பங்கீட்டில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை என சொல்லப்படுகின்றது. புதிதாக திமுக கூட்டணியில் சிலர் இணைந்திருப்பதால் எங்களுக்கு குறைவான தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறி வருகின்றனர்.ஆனாலும் விரைவில் சுமுகமான முடிவு எட்டப்படும் என தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அதிகமான தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு கூடுதலாக தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தங்களுக்கு மட்டும் ஏன் குறைவான தொகுதிகள் கொடுக்கப்படுவதாக சில கட்சிகள் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து ஏற்கனவே காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தன் கருத்தினை கூறினார். தற்போது மீண்டும் இதுகுறித்து அவர் பேசியிருக்கிறார். திமுகவின் தோழமை கட்சிகளுக்கு அவர்களுக்கு தேவையான தொகுதிகளை கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அதே போல கொடுப்பதற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு மனமுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியை ஒப்பிட்டு தொகுதிகளை கேட்க வேண்டாம்.
காங்கிரஸ் கட்சியில் நூறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். காங்கிரஸ் கட்சி என்பது பிரதானமான ஒரு எதிர்க்கட்சி. புதுச்சேரியிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். ஏற்கனவே பலமுறை எங்களை ஒப்பிட்டு பேச வேண்டாம் என சொல்லிவிட்டோம். ஒருகட்டத்தில் நூறு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்ட நாங்கள் இன்று 28 தொகுதிகளில் மட்டும் தான் போட்டியிடுகின்றோம். அப்படியென்றால் எங்களுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்.
110 தொகுதிகளில் இருந்து 63, 41, 25 என தொகுதிகள் குறைந்துகொண்டே தான் வருகின்றன. அதனால் நாங்கள் குறைகூறவில்லை. கூட்டணிக்கு எது சரியோ அதன்படி செயல்பட்டுக்கொண்டு வருகின்றோம். நூறு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட பேரியக்கம் தான் காங்கிரஸ்கட்சி. தயவுசெய்து எங்களை ஒப்பிட்டு பேசாதீர்கள். நாங்களும் எங்கள் கட்சியை பற்றி தான் பேசுகின்றோமே தவிர, பிற கட்சிகளுக்கு ஏன் இத்தனை தொகுதிகள் கொடுத்தீர்கள் என கேட்கவில்லை.
அதுபோல உங்களுக்கான தொகுதிகளை கேளுங்கள், அதற்கு உங்களுக்கு முழு உரிமை உள்ளது, எங்களை ஒப்பிட்டு கேட்காதீர்கள் என செல்வப்பெருந்தகை கூறிவிட்டார். இந்நிலையில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துக்கொண்டே வந்தது. ஆட்சியில் பங்கு உட்பட பல கோரிக்கைகள் காங்கிரஸ் கட்சியால் வைக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
ஆனால் இதற்கெல்லாம் திமுகஉடன்பட்டதாக தெரியவில்லை. ஒருகட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி பிரிந்தாலும் பிரியலாம் என்றே சொல்லப்பட்டது. பல வதந்திகள் இக்கூட்டணி குறித்து பரவின. ஆனால் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இக்கூட்டணி வெற்றிகரமாக சுமுகமாக இணைந்தது.

திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளோம் – CPM சண்முகம் பேட்டி

அதனைத்தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என தெரிகின்றது. இருந்தாலும் இறுதிக்கட்ட பேச்சுவார்தைக்குள் சுமுகமான முடிவு எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது. இதையடுத்து மிக விரைவில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அனைத்திற்கும் இடையே சுமுகமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.