Selvaperunthagai Congress,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த செல்வப்பெருந்தகை – selvaperunthagai decided to step down from congress tamilnadu head position

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிருக்கின்றார். இன்று தான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. அதில் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தான் போட்டியிடுவார் என்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார் செல்வப்பெருந்தகை. மேலும் பதவி விலக கோரி எந்த அழுத்தமும் எனக்கு இல்லை என்றும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்

இதுகுறித்து அவர் பேசியது, தேர்தல் முடிவு வந்த பிறகு நான் முழுக்க முழுக்க ஸ்ரீபெரும்புதூர் மக்களுக்காக தான் பணி செய்யவுள்ளேன். கடந்த இரண்டு ஆண்டுகள் என்னை நம்பி இந்த பதவியை தலைமை கொடுத்தார்கள். அதனை மிக சிறப்பாக செய்திருக்கின்றேன். 2024 பாராளுமன்ற தேர்தலில் 100 % வெற்றியை பெற்றோம்.

தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளில் வெற்றி, புதுச்சேரியில் ஒரு தொகுதியில் வெற்றி என 100 % வெற்றிபெற்றோம். இந்த தேர்தலிலும் நூற்றிற்கு நூறு வெற்றியை பெற போகின்றோம். எப்போதும் ஒரு பதவியில் இருந்து விலகும்போது மனநிறைவோடு விலக வேண்டும். நான் கடந்த இரண்டு ஆண்டுகள் என் பணியை சிறப்பாக செய்தேன். அதன் காரணமாக மனநிறைவோடு இந்த முடிவை எடுத்துள்ளேன். இதில் எந்த அழுத்தமும் இல்லை.

தலைமையில் இருந்து எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நான் தலைவர் பதவியில் இருந்திருக்கலாம். நான் எந்த பதவி கேட்டாலும் தலைவர் ராகுல் காந்தி வழங்குவார். மனநிறைவோடு வேலை செய்தோம். தற்போது மனநிறைவோடு பதவியில் இருந்து விலகுகிறேன். இனிமேல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்காக தான் பணி செய்ய இருக்கின்றேன். மாநில தலைவர் பதவியில் இருந்தபோது திட்டங்களை செயல்படுத்த முடிந்தது, மக்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள முடையவில்லை

இனி ஸ்ரீபெரும்புதூர் மக்களின் பிள்ளையாக இருக்க போகின்றேன். கடந்த இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டின் பிள்ளையாக இருந்து பணியாற்றினேன். இனி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களின் பிள்ளையாக செயல்பட இருக்கின்றேன். இனி வேறொருவர் தமிழ்நாடு பிள்ளையாக செயல்படுவார் என்றார் செல்வப்பெருந்தகை.இவ்வாறு தான் ஏன் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்திருக்கின்றார் செல்வப்பெருந்தகை.

இந்நிலையில் செல்வப்பெருந்தகைதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக செய்திகள் வந்தன. உடனே செல்வப்பெருந்தகை அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்தாரா ? என பேசப்பட்டு வந்தது. ஆனால் எந்த அழுத்தமும் இல்லை, நான் நினைத்தால் ஐந்து ஆண்டுகள் மாநில தலைவர் பதவியில் இருக்கலாம் என பேசினார் செல்வப்பெருந்தகை. இதன் மூலம் அவரது முடிவு அழுத்தத்தால் எடுக்கப்படவில்லை என தெரிகின்றது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் இருந்து வருவதாக சமீபகாலமாக பேசப்பட்டு வந்தது.

கட்சிக்குள் பல கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதெல்லாம் ஒன்றும் இல்லை என கூறி வந்தார் செல்வப்பெருந்தகை. இருப்பினும் தற்போது அவர் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகியிருப்பது பேசும்பொருளாக மாறியிருக்கின்றது. இதனைத்தொடர்ந்து தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவராக பதவி ஏற்கப்போவது யார் என்ற பேச்சுக்களும் ஒருபக்கம் துவங்கியிருக்கிறது.

என்னதான் தேர்தலுக்கு பிறகு பதவி விலகபோவதாக செல்வப்பெருந்தகை சொன்னாலும் தற்போதே அடுத்த தலைவருக்கான பேச்சுக்கள் துவங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Source link