இவ்வாறு தவெக கூட்டணி குறித்து பல பேச்சுக்கள் போய்க்கொண்டு இருந்த நிலையில் யாருடனும் கூட்டணி இல்லை என்ற முடிவிற்கு வந்தார் விஜய். இதற்கு என்ன காரணம் என்று தான் பலரும் விவாதித்து வந்தனர். ஒருசிலர் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என விஜய் சொல்லியும் அவருடன் கூட்டணி வைக்க யாரும் முன்வரவில்லை என விமர்சித்தார்கள். அதிமுக தரப்பு ,நாங்கள் விஜய்யுடன் கூட்டணி குறித்து எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றனர்.
செங்கோட்டையன் பரப்புரை
இந்நிலையில் தவெக நிர்வாகி செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார். அந்த பேச்சில், எடப்பாடி பழனிச்சாமியின் முயற்சியை நான் தான் முறியடித்தேன் என கூறினார் செங்கோட்டையன். அவர் பேசியது, எடப்பாடி பழனிச்சாமி என்மீது கடும் கோபத்தில் இருக்கின்றார். அவரது முயற்சியை நான் முறியடித்ததால் என் மீது அவர் கடும் கோபத்தில் இருக்கின்றார்.
விஜய்யின் ஆதரவோடு முதல்வராகலாம் என திட்டம்போட்டார் எடப்பாடி பழனிச்சாமி. விஜய்யின் ஆதரவோடு முதல்வராகி 5000 கோடி சம்பாதிக்கலாம் என்பது தான் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம். அந்த முயற்சியை நான் முறியடித்தேன்.அதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி என் மீது கோபத்தில் இருக்கின்றார். எனவே தான் என் வேட்புமனு நிராகரிக்கப்படுகிறது, மனுதாக்கல் செல்லாது என சொல்லப்படுகின்றது.
எடப்பாடி பழனிச்சாமி முயற்சி
அந்தளவிற்கு எடப்பாடி பழனிச்சாமி கோபத்தில் உள்ளார். என்னை துரோகி என சொல்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி. நான் பொதுச்செயலாளர் பதவியை அவருக்கு விட்டுக்கொடுத்ததற்கு பரிசு தான் துரோகி, இவ்வாறு நான் விட்டுக்கொடுத்ததற்கு பரிசாக என்னை துரோகி என சொல்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி. என்னை டெபாசிட் இழக்க வைத்து அந்த தோல்வியை கொண்டாட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சொல்கின்றார்.
மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது அவருக்கு தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு எடைபோட தெரியவில்லை. மக்கள் விசில் சின்னத்தில் எனக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர் என்பது அவருக்கு தெரியவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன். இவர் பேசியதற்கு பிறகு தான், உண்மையிலேயே தவெக மற்றும் அதிமுக இடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்திருக்குமோ ? என்ற கேள்வி மீண்டும் எழுந்து வருகின்றது
எடப்பாடி பழனிச்சாமி விஜய்யுடன் கூட்டணி வைக்க நெனைத்ததாகவும், அதனை நான் தான் முறியடித்தேன் எனவும் செங்கோட்டையன் வெளிப்படையாக கூறியிருக்கின்றார். எனவே அதிமுக -தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது இவர் சொல்வதன் மூலம் தெரிய வருகின்றது.ஆனால் அதே சமயம் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என திட்டவட்டமாக சொன்னார்.
விஜய்யின் முடிவு
அவரை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் பலரும் இதே பதிலை தான் சொன்னார்கள். அப்படியென்றால் செங்கோட்டையன் சொல்வது உண்மையா ? இல்லை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சொல்வது உண்மையா ? என்ற கேள்வி எழுகின்றது. ஆனால் இதையெல்லாம் தாண்டி விஜய் அதிமுக -பாஜக கூட்டணியில் இணையாதது அவரின் அரசியல் எதிர்காலத்திற்கு மிகவும் நன்மையாக முடியும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.
ஏனென்றால் தனது கொள்கை எதிரி பாஜக என திட்டவட்டமாக பேசிய விஜய்பாஜக இருக்கும் கூட்டணியிலேயே இடம்பிடித்தால் கண்டிப்பாக அவருக்கு பின்னடைவாக தான் அமையும். ஆனால் தற்போது விஜய் தனித்து நிற்பது மக்களின் நம்பகத்தன்மையை காப்பாற்றும் விதமாக அமைந்திருக்கின்றது. ஒருவேளை அவர் பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், கொள்கை எதிரி என சொல்லிவிட்டு அவர்களுடனே விஜய் கூட்டணி வைத்துள்ளாரே என மக்கள் கேள்வி எழுப்பியிருப்பார்கள்.
ஆனால் தற்போது தனது கொள்கையில் விஜய் உறுதியாக இருக்கின்றார் என மக்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இந்த நம்பிக்கை கண்டிப்பாக அவருக்கு வாக்குகளாக மாறும் என தவெகவினர் ஒருபக்கம் நம்பிக்கையாக காத்துகொண்டு இருக்கின்றனர். எனவே அதிமுக -தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்திருந்தாலும், நடக்கவில்லை என்றாலும் கடைசியில் விஜய் தனித்து நிற்பது தான் அவர் எடுத்த சரியாக முடிவு என்பது தான் பொதுவான கருத்தாக உள்ளது.
