Sengottaiyan About Vijay Campaign,அனுமதி கொடுத்த அடுத்த நிமிடமே தவெக தலைவர் விஜய் மக்களை சந்திப்பார் : செங்கோட்டையன் – sengottaiyan about tvk campaign and vijay complaint to election commissioner

தவெக தலைவர் விஜய் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு கொடுத்திருக்கின்றார். இதனைத்தொடர்ந்து தவெக நிர்வாகி செங்கோட்டையன் தேர்தல் அதிகாரியை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்

முக்கிய அம்சங்கள்:

அனுமதி கிடைத்ததும் விஜய் மக்களை சந்தித்தார்

தவெக செங்கோட்டையன் பேச்சு

sengottaiyan about tvk campaign
தலைமை செயலகத்திற்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று புகார் மனு கொடுத்துள்ளார். இன்று பெரம்பூர் தொகுதியில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருந்தார். அதற்கான பணிகளையும் தவெகவினர் செய்து வந்தனர். ஆனால் நேற்று பெரம்பூரில் விஜய் பரப்புரை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தவெக தேர்வு செய்திருக்கும் பகுதி நெருக்கடியான பகுதி என்பதால் அங்கு பரப்புரை செய்ய இயலாது என்ற காரணத்தை கூறி அனுமதியை காவல்துறையினர் மறுத்திருக்கின்றனர்.மேலும் மாற்று இடத்தை தேர்வு செய்யுமாறும் விஜய்யை வலியுறுத்தி இருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரியை நேரடியாக சந்தித்து மனு கொடுத்துள்ளார் தவெக தலைவர் விஜய். அவருடன் தவெக நிர்வாகி செங்கோட்டையனும் உடன் இருந்தார். மனு கொடுத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அனுமதி கிடைத்த அடுத்த நொடியே தவெக தலைவர் விஜய் மக்களை சந்திப்பார் என்றார்.

மேலும் அவர் பேசியது, பெரம்பூரில் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. வேறு இடத்தை காட்டுங்கள் என சொல்கின்றனர். ஆனால் பேருந்தில் பயணம் செய்து, பூக்களை வீசிக்கொண்டு, தெரு தெருவாக சென்று பரப்புரை செய்வதை நாங்கள் பார்க்கின்றோம். அதற்கெல்லாம் என்ன விதி உள்ளது. எந்த விதிகளின் அடிப்படையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது என தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு மட்டும் விதிகளை வைத்துக்கொண்டு அனுமதி மறுக்கப்படுகின்றது.

நூறு பேருக்கு மேல் கூட்டத்தை கூட்டக்கூடாது என சொல்கின்றனர். தவெக தலைவர் வருகின்றார் என்றதுமே ஆயிரம் பேர் சூழ்கின்றனர். இதனை தவிர்க்கமுடியாது. அவர் மீது பலருக்கு அச்சம் உள்ளது. தவெக தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்துவிடுவார் என்ற அச்சத்தில் தான் இதுபோல செய்கின்றனர். தவெக இயக்கத்தின் சுற்றுப்பயணத்தை முடக்க நினைக்கின்றனர். தலைவர் விஜய் மக்களை சந்திப்பதை தடுக்கின்றனர்.
இதுகுறித்து தான் தேர்தல் அதிகாரியிடம் கூறியிருக்கின்றோம். அவர்கள் தக்க நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கின்றனர். மக்கள் விஜய்யை சந்திக்க ஆவலாக இருக்கின்றனர். தலைவரும் மக்களை சந்திக்க ஆசையாக உள்ளார். ஆனால் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. தவெகவினரை தேர்தல் பணிகளை செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர் என்றார் செங்கோட்டையன். எங்களுடைய பணிகள் எல்லாம் முடக்கப்படுவதற்கு உயர் அதிகாரிகள் தான் காரணம்.
அவர்களை மாற்ற வேண்டும் என சொல்லியிருக்கின்றோம். எங்களுக்கு கொடுக்கப்பட்ட சட்டவிதியின்படி ஐயாயிரம் பேருக்கு உட்பட்டு நிகழ்ச்சி நடத்தலாம் என உள்துறை செயலகம் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது காவல்துறை எங்களுக்கு அனுமதியை மறுத்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் மட்டும் பல உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கின்றனர். ஆனால் இங்கு ஏன் அப்படி செய்யவில்லை.
தேர்தல் முடியும்வரை உயர் அதிகாரிகளை மாற்றுவதற்கு ஏன் அச்சப்படுகின்றனர் என்றார் செங்கோட்டையன். இதனைத்தொடர்ந்து அனுமதி கிடைத்த அடுத்த நொடியே தவெகவினர் மக்களை சந்திக்க தயாராக இருக்கின்றனர். குறிப்பாக தவெக தலைவர் விஜய் அனுமதி கிடைத்த அடுத்த நொடியே மக்களை சந்திக்க ஆவலாக இருக்கின்றார் என்றார்.
இவ்வாறு தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனு கொடுத்தது தொடர்பாக பேசினார் செங்கோட்டையன். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது பரப்புரையை மேற்கொண்டு வருகின்றார். அவருக்கு அனுமதி கிடைக்கும்போது தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன் ? என்ற கேள்வியை தவெகவினர் முன் வைக்கின்றனர்.

ராஜ்யசபா சீட்க்கு No சொன்ன அதிமுக? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி…!

ஒருவேளை திமுக தவெக கட்சியின் எழுச்சியை பார்த்து பயப்படுகின்றார்களா ? என தவெகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் திமுகவினரை பொறுத்தவரை விஜய்யின் பரப்புரைக்கு அனுமதி கிடைக்காததற்கும் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றே சொல்கின்றனர். இதற்கிடையில் தவெக தலைவர் விஜய்க்கு பெரம்பூரில் பரப்புரை செய்ய அனுமதி கிடைக்குமா ? அவரின் புகார் மனுவிற்கு தேர்தல் அதிகாரி என்ன பதிலளிக்க போகின்றார் ? என தவெக ஆதரவாளர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர்.