T .selvam About Congress,காங்கிரஸ் கட்சியில் 80 % பேர் திமுக கூட்டணியை விரும்பவில்லை..டி.செல்வம் பேச்சு – tvk selvam about rahul gandhi mindset about dmk alliance

காங்கிரஸ் கட்சியிலிருந்து டி.செல்வம் தற்போது விஜய்யின் தவெக கட்சியில் இணைந்திருக்கிறார். தற்போது செய்தியாளர்களை சந்தித்த டி.செல்வம் காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலானோர் திமுக கூட்டணியை விரும்பவில்லை என பேசியிருக்கிறார்

முக்கிய அம்சங்கள்:

ராகுல் காந்தி விருப்பம்

டி.செல்வம் பேச்சு

t.selvam about rahul gandhi
காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டி.செல்வம் சமீபத்தில் விஜய்யின் முன்னிலையில் தவெக கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் சிலர் தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என விரும்பியதாக சொல்லப்பட்டது. ஒருகட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப்பங்கீட்டில் இழுபறியான நிலை ஏற்பட்டபோது காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என பேச்சுக்கள் போய்க்கொண்டு இருந்தன. காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து இருப்பதாகவும், அதில் ஒரு பிரிவினர் தவெக கூட்டணியை விரும்புவதாகவும், மற்றவர்கள் திமுக கூட்டணியை விரும்புவதாக எல்லாம் சொல்லப்பட்டது.ஆனால் கடைசியில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் தொடர்கின்றனர். இந்நிலையில் ராகுல் காந்தியே தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்பினார் என டி.செல்வம் கூறியிருக்கின்றார். இவரின் இந்த கருத்து தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டி.செல்வம் தன்னை தவெகவுடன் இணைத்துக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வம், தலைவர்ராகுல் காந்திகட்சித்தொண்டர்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என நினைத்தார். அதைத்தொடர்ந்து அதிக தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியிலும் பங்கு தர வேண்டும் என விரும்பினார். அதன் அடிப்படையில் தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினார் ராகுல் காந்தி. தவெகவுடன் கூட்டணி அமைத்து தமிழக மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என விரும்பினார் ராகுல் காந்தி.
ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அது நடக்காமல் போனது. சில சுயநலவாதிகள் மற்றும் சந்தற்பவாதிகளின் சூழ்ச்சி காரணமாக தவெகவுடன் கூட்டணி அமையாத நிலை ஏற்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக ராகுல் காந்தி எந்த எண்ணத்தோடு செயல்பட்டு வந்தாரோ அது நடக்காமல் போய்விட்டது. கட்சியில் இருக்கும் 80 சதேவீத தொண்டர்கள் திமுக கூட்டணியை எதிர்த்து வருகின்றனர். தொண்டர்கள் மட்டுமல்லாமல் 80 சதவீதம் நிர்வாகிகளும் திமுகவுடன் கூட்டணி வைப்பதை எதிர்த்து வருகின்றனர்.
ஏனென்றால் காங்கிரஸ் என்ற கட்சியை திமுக கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றனர். எனவே தான் அப்படிப்பட்ட திமுகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நினைத்தார்கள். காங்கிரஸ் அனுதாபிகள் தவெகவுடன் கூட்டணி வைக்கவே விரும்பினார்கள். மீண்டும் காமராஜர் ஆட்சி வர வேண்டும் என நினைத்தார்கள். ஆனால அது ஒரு சிலரால் நடக்காமல் போய்விட்டது.
காங்கிரஸ் கட்சியின் கொள்கையே மதசார்பட்ட கொள்கை. அதே கொள்கையை தான் தவெக வைத்திருக்கின்றனர். என்னைப்போன்ற பெரும்பாலான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களை அதிகமாக ஈர்த்தது இரண்டு விஷயங்கள் தான். மதசார்பட்ட கொள்கை மற்றும் ஊழலற்ற ஆட்சி. தவெகவின் இந்த இரண்டு கொள்கையும் தான் எங்களை வெகுவாக ஈர்த்தது.
இதனைத்தொடர்ந்து தவெக கண்டிப்பாக தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று தவெக தலைவர்தலைமையில் ஆட்சியமையும் என உறுதியாக சொல்கின்றேன் என்றார் டி.செல்வம். இந்நிலையில் ராகுல் காந்தியே தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்பினார் என டி.செல்வம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஏற்கனவே திமுகவுடன் கூட்டணி அமைந்ததற்கு ராகுல் காந்தி வாழ்த்து சொல்லவில்லை என்ற பேச்சு போய்க்கொண்டு இருந்தது. ஆனால் அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எப்போதும் கூட்டணி அமைந்ததற்கு எல்லாம் ராகுல் காந்தி வாழ்த்து சொல்லமாட்டார் என்றார். முக ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ராகுல் காந்தி போனில் அவருக்கு வாழ்த்து சொன்னார் எனவும் கூறினார்.

திமுக கூட்டணியில் இருந்து பாஜகவுக்கு செல்லும் கட்சி எது? திருமாவளவன் பேட்டி ..!

இருந்தாலும் சோஷியல் மீடியாவில் ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பாரோ ? என்ற சந்தேகத்தில் சிலர் பேசி வருகின்றனர். இப்படியான ஒரு சூழலில் ராகுல் காந்தி தவெக கூட்டணியை தான் விரும்பினார் என டி.செல்வம் பேசியிருப்பது விவாதப்பொருளாகி இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் 80 % திமுக கூட்டணியை விரும்பவில்லை எனவும் பேசியுள்ளார். கண்டிப்பாக இதுகுறித்து செல்வப்பெருந்தகை பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.