தமிழிசை அவர்கள் இதுவரை தோல்வியை தான் சந்தித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை பத்து தோல்வி பழனிச்சாமி என அழைப்பது போல தமிழிசை அவர்களை ஆறு தோல்வி தமிழிசை என அழைக்கலாம். தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு ஆளுநர் பதவி தான் சரி. அவரை மீண்டும் ஆளுனராக்க நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என பேசினார் உதயநிதி ஸ்டாலின்.
இவரின் இந்த விமர்சனம் குறித்து தமிழிசையிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்திருக்கின்றார். அவர் கூறியது உதயநிதி ஸ்டாலின் ஒன்றும் என்னை ஆளுனராக்கவில்லை. அதைப்போல உதயநிதி ஸ்டாலின் போன்று அவரின் அப்பா தோளில் ஏறி நான் வரவில்லை. தானாக வளர்ந்துகொண்டு வருகின்றோம்.ஆனால் உதயநிதி ஸ்டாலின் அப்படி இல்லை. அவருடைய கட்சியிலேயே சேர்ந்து அப்பா தோள்களில் ஏறி மற்றவர்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்பினை பறித்து துணை முதல்வராகி இருக்கின்றார்.
எனவே நானும் அவரும் ஒன்றல்ல. என்னையும் உதயநிதி ஸ்டாலினையும் ஒப்பிட்டு பார்க்கையில் அவருக்கு அனுபவம் மிகவும் குறைவு. மிகவும் இளையவர், சிறுபிள்ளையின் உருறுதலாகவே தான் நான் அதை பார்க்கின்றேன் என்றார் தமிழிசை சௌந்தரராஜன். இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக பதவியேற்று இருந்தார். அதன் பிறகு 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.
அதற்கு முன்பு 2009 மற்றும் 2019 ஆகிய மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் தமிழிசை சௌந்தரராஜன். மேலும் 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் தமிழிசைக்கு வெற்றிகிடைக்கவில்லை. இதனைக்குறிப்பிட்டு தான் தமிழிசை சௌந்தர்ராஜனை விமர்சனம் செய்திருக்கின்றார் உதயநிதி ஸ்டாலின். எனவே அவரின் விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில் இம்முறை மைலாப்பூர் தொகுதியில் தமிழிசை வெற்றிபெறுவாரா ? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் மைலாப்பூர் தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் பலமுறை அதிமுக வெற்றிபெற்று இருக்கின்றனர். 2001 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக இங்கு வெற்றிபெற்ற நிலையில் அதன் பிறகு 2006, 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுக தான் மைலாப்பூர் தொகுதியில் வெற்றிகண்டுள்ளனர். கடந்தமுறை தான் திமுகவின் வேலு இங்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். எனவே மைலாப்பூர் தொகுதியில் அதிமுகவின் ஆதிக்கமும் இதற்கு முன்பு இருந்துள்ளது.
கடந்த முறை கூட அதிமுக மற்றும் திமுகஇடையேயான வாக்கு வித்யாசங்கள் மிக குறைவாகவே இருந்தது. இந்நிலையில் மைலாப்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இம்முறை போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் வெற்றிபெறுவாரா ? உதயநிதி ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா ? என்பது தான் கேள்வியே.
தமிழிசையின் ஆதரவாளர்கள் கண்டிப்பாக இம்முறை வெற்றி உறுதி என நம்பிக்கையுடன் இருக்கின்றனர். தமிழிசையும் மைலாப்பூர் தொகுதியில் அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை. மைலாப்பூர் மக்களுக்கு அன்பான சட்டமன்ற உறுப்பினர் தேவை. அது நானாக இருப்பேன் என உறுதியளிப்பதாக கூறி அவரும் வெற்றிவாய்ப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றார்.
