Tamilisai Soundararajan About Dmk,ஐயாயிரம் கொடுத்த திமிர்..அப்பாவை வீட்டுக்கு அனுப்பிட்டு அம்மாவின் ஆட்சி அமையும் : தமிழிசை சௌந்தரராஜன் – bjp tamilisai soundararajan criticise dmk government and mk stalin

திமுக அரசை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் இணைந்துள்ளனர். கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கின்றது. குறிப்பாக பெண்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை என்பது போன்ற பல காரணங்களை வைத்து திமுக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எடப்பாடி பழனிச்சாமி உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் பாஜகவின் தமிழிசை சௌந்தர்ராஜனும் திமுக அரசை கடுமையாக கண்டித்து பேசியுள்ளார். அவர் பேசியது, ஸ்டாலினின் ஆட்சியில் மட்டும் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட கொலைகள் நடந்து வருகின்றன.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி vs ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்..இருவருக்கும் என்ன பிரச்சனை ? பாஜக ஜான்குமார் பேச்சு

இதுதான் தமிழகத்தின் நிலைமை. பல லட்சம் டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது. அப்படி பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாக்களை எலி தின்றுவிட்டதாக சொல்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாக்களை எலி தின்றுவிட்டதாம். இதையெல்லாம் நம்ப முடியாது. குற்றம் செய்தவர்கள் இந்த ஆட்சியில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டு இருக்கின்றனர். 14 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கின்றார்.

பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை. ஆனால் ஐயாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டோம் என பெருமை பேசுகின்றனர். ஐயாயிரம் பணத்தை கொடுத்த திமிரில் திமுகவினர் இருக்கின்றனர். அவர்களின் திமிரை பெண்கள் அடக்க வேண்டும். பெண்கள் எல்லாம் நிமிர்ந்து எழுந்து திமுக அரசை எதிர்க்க வேண்டும். இதற்கெல்லாம் ஸ்டாலின்தான் பதில் சொல்லவேண்டும். அவர் சொல்வது போல 2 .0 லாம் வராது.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் கண்டிப்பாக 2 .0 லாம் வராது.

அவர்களுக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும். திமுகவும் ஸ்டாலினும் வீட்டிற்கு போக வேண்டியது தான். அப்பாவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி அமையும். அம்மா ஜெயலலிதா அவர்களின் வழியில் அதிமுக தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்றார் தமிழிசை. மேலும் நிரந்தர டிஜிபியை பணியில் அமர்த்தாமல் இருப்பது ஏன் ? நிரந்தர டிஜிபியை போடுவதில் ஸ்டாலினுக்கு என்ன பிரச்சனை ? தமிழகத்தில் குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

அப்படி இருக்கும்போதும் இவர்கள் நிரந்தர டிஜிபியை பணியில் அமர்த்தாமல் இருக்கின்றனர். மேலும் முதலமைச்சர் சொல்கின்றார், குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை வைக்க வேண்டும் என்கின்றார். முதலில் இவர்களின் குடும்பத்தில் இருப்பவர்களுக்கே தமிழ் பெயர் இல்லை. பிரதமர் மோடி அவர்கள் தூத்துக்குடி விமான நிலையத்திற்கே தமிழ் பெயர் தான் வைத்திருக்கின்றார். தமிழ்நாடு மக்கள் மீது தனி அக்கறை கொண்டுள்ளார் பிரதமர் மோடி.

இதுதான் எங்களின் ஆட்சி என்றார் தமிழிசை. மேலும் முதலமைச்சர் முக ஸ்டாலின் திமுகவிற்காக வாக்கு கேட்டு வரும்போது மூன்று விஷயங்களுக்கு அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும். முதலில் பெண்களுக்கு எதிரான வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை, பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை, மதுக்கடைகளை குறைப்பேன் என்றார்கள், செய்யவில்லை.

Exclusive: கோபப்பட்ட அண்ணாமலை: டெல்லியில் நடந்தது என்ன?

ஆனால் இதையெல்லாம் அவர்கள் செய்யவே இல்லை. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்க தமிழக மக்கள் காத்துகொண்டு இருக்கின்றனர். அந்த பதிலடி அவர்களுக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கிடைக்கும் என கடுமையாக விமர்சித்து பேசினார் தமிழிசை சௌந்தரராஜன்.

Source link