Thirumavalavan About Vijay,விஜய் தனித்து போட்டியிட பாஜக தான் காரணம் : திருமாவளவன் – bjp planning to split dmk votes by tvk vijay says thirumavalavan

விஜய்யின் தவெக பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என ஒருகட்டத்தில் பேசப்பட்டது. இந்த பேச்சு பலருக்கும் அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் தான் இருந்தது. ஏனென்றால் விஜய் பாஜக தான் தனது கொள்கை எதிரி என கூறினார். அப்படி இருக்கையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மக்கள் என்ன நினைப்பார்கள் ? என்ற கேள்வி எழுந்தது. அதோடு மட்டுமல்லாமல் விஜய் தொடர்ந்து திமுகவை மட்டுமே தான் விமர்சித்து வருகின்றார்.

பாஜகவை அவர் விமர்சிப்பதே இல்லை. ஒருவேளை பாஜகவிற்கும் விஜய்க்கும் இடையே சமரசமாக பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருக்கின்றதா ? பாஜகவுடன் விஜய் நட்புறவில் இருக்கின்றாரா ? என்றெல்லாம் வதந்திகள் பரவின. இதையெல்லாம் வைத்து பார்க்கையில் விஜய் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருக்குமோ ? என்ற கோணத்திலும் பேசப்பட்டு வந்தது.

ஆனால் விஜய் யாருடனும் கூட்டணி வைக்காமல் தற்போது தனித்தே தேர்தலில் போட்டியிடுகின்றார். இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் விஜய் தனித்து போட்டியிடுவதற்கு பாஜகதான் காரணம் என கருத்து தெரிவித்துள்ளார். திமுகவின் வாக்கு வங்கியை பாஜக பிரிக்க நினைத்தனர். குறிப்பாக இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் வாக்குகளை திமுகவுடன் இருந்து பிரிக்க நினைத்தனர் பாஜக.

அதன் காரணமாக தான் விஜய்யை தனித்து போட்டியிட வைத்துள்ளனர் என திருமாவளவன் கூறியிருக்கின்றார். இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் வாக்குகளை பிரித்தால் திமுகவின் வெற்றி பாதிக்கப்படும் என்ற கணிப்பில் பாஜக விஜய்யை தனித்து போட்டியிட வைத்துள்ளனர் என கூறியிருக்கின்றார் திருமாவளவன்.

ஏற்கனவே விஜய்யின் அரசியல் வருகையால் திமுகவிற்கு தான் பாதிப்பு. விஜய் திமுக வாக்குகளை தான் பிரிப்பார் என்ற ஒரு பேச்சு போய்க்கொண்டு இருக்கின்றது. குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்தவர்கள் விஜய்யால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விஜய் திமுக வாக்குகளை தான் பிரிப்பார் என்றனர். குறிப்பாக ஹெச்.ராஜா விஜய்யின் தவெக திருமாவளவனின் வாக்குகளை தான் பிரிப்பார்கள் என குறிப்பிட்டு பேசினார்.

இதனைத்தொடர்ந்து தற்போது திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் திருமாவளவன், பாஜக தான் விஜய்யை தனித்து போட்டியிட வைத்திருக்கின்றது என கருத்து தெரிவித்து இருக்கின்றார். இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் வாக்குகளை பிரிப்பதற்காகவே விஜய்யை பாஜக தனித்து போட்டியிட வைத்துள்ளனர் என திருமாவளவன் கூறியதை தொடர்ந்து அப்போ திமுக வாக்குகளை தான் விஜய் பிரிப்பாரா ? என்ற கேள்வி மேலும் அதிகமாகி இருக்கின்றது.

பாஜகவின் நோக்கமே விஜய்யை தனித்து போட்டியிட வைத்து திமுகவிற்கு கிடைக்கவேண்டிய இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவர்களின் வாக்குகளை பிரிப்பது தான் பாஜகவின் திட்டம் என திருமாவளவன்கூறியிருக்கின்றார். அப்படியென்றால் விஜய் பாஜகவின் பி டீமா ? திமுகவின் வாக்குகளை விஜய் பிரிப்பதாக சொல்வது உண்மைதானா ? என மக்கள் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் தவெக கட்சியால் திமுகவிற்கு பாதிப்பா ? அதிமுக கூட்டணிக்கு பாதிப்பா ? விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்பது தான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஆனால் கண்டிப்பாக விஜய்யின் தவெக இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே பலரது கருத்தாகவும் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link