Ttv Dhinakaran About Eps,அண்ணன் -தம்பி சண்டை தான்..அமித் ஷா முயற்சியால் தான் ஒன்று சேர்ந்தோம் : டிடிவி தினகரன் – ttv dhinakaran says amit shah is the main reason for the reunion with edapp

தேசிய ஜனநாயக கூட்டணி மீது முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த வாரம் கூட ஒரு விமர்சனத்தை முன் வைத்தார். அதாவது ஒரு காலத்தில் எடப்பாடி பழனிசாமியை டிடிவி தினகரன் எப்படியெல்லாம் கடுமையாக விமர்சித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதைப்போல அன்புமணி ராமதாஸ் கூட எடப்பாடி பழனிசாமியை கடுமையாக பேசியிருந்தார். ஆனால் தற்போது அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என விமர்சித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்நிலையில் தற்போது அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் நாங்கள் அமித் ஷா முயற்சியால் தான் ஒன்று சேர்ந்தோம் என பேசியுள்ளார். ஒருகட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டிடிவி தினகரன் இருவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருக்கின்றனர்.

இதுகுறித்து திமுகதரப்பு கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தற்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக டிடிவி தினகரன், எங்களுக்குள் இருந்த சண்டை அண்ணன்-தம்பிகளுக்கு இடையே இருந்த சண்டை போல தான். அண்ணன் -தம்பி, மாமா -மச்சான், பங்காளி சண்டை போல தான் எங்களுடைய சண்டையும். எங்களை ஒன்று சேர்த்து வைத்தது பாஜக தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அமித் ஷா அவர்களின் முயற்சியால் தான் நாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தோம். தற்போது அனைத்து அதிமுக தொண்டர்களும் ஒன்று சேர்ந்துவிட்டோம். இதெல்லாம் அமித் ஷா முயற்சியால் தான் நடந்தது என பேசியுள்ளார் டிடிவி தினகரன். இந்நிலையில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தவர் தான் டிடிவி தினகரன்.

அதன் காரணமாக தான் அவரின் அமமுககட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது பேசும்பொருளானது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் டிடிவி தினகரன் எப்படி இணைந்திருப்பார் ? என்ற கேள்விகள் எழுந்தது. ஆனால் டிடிவி தினகரன் அவர்களே எங்களுக்குள் இருந்த பிரச்சனை சுமுகமாக முடிந்துவிட்டது என்றார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் எனவும் திட்டவட்டமாக கூறினார்.

ஒருகட்டத்தில் மோடி எடப்பாடி பழனிச்சாமியின் பெயரையே குறிப்பிடவில்லையே, ஒருவேளை தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றால் முதல்வராக பொறுப்பேற்பது யார் ? எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அவர்கள் சொல்லவில்லையே ? என்பது போன்ற பல சர்ச்சைகள் இருந்தது. அப்போது டிடிவி தினகரன் தான் வெளிப்படையாக தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி, எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என்றார்.

இவ்வாறு இருவருக்குள்ளும் சமரச போக்கு செல்ல அமித் ஷா தான் காரணம் என டிடிவி தினகரன் கூறியிருக்கின்றார். ஆனால் தற்போது ஒற்றுமையாக இருக்கும் இவர்கள் தேர்தல் முடிந்த பிறகும் இதே ஒற்றுமையோடு இருப்பார்களா ? என்பது தான் திமுக தரப்பினரின் கேள்வியாக உள்ளது. தேர்தலுக்கு பிறகு எடப்பாடியின் நிலையே கேள்விக்குறியாக இருக்கும்போது கூட்டணி கட்சிகளில் இருப்பவர்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வியை திமுக ஆதரவாளர்கள் முன் வைத்து வருகின்றனர்.

ஆனால் அதிமுக கூட்டணி தான் ஆட்சியமைக்கும். எடப்பாடி பழனிச்சாமி தான் மீண்டும் முதல்வராவார் என்பது தான் இக்கூட்டணியில் இருப்பவர்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே தற்போது ஒன்று சேர்ந்து செயல்படும் இவர்கள் தேர்தல் முடிவிற்கு பிறகும் ஒன்றாக இருப்பார்களா? என்ற திமுக தரப்பினரின் கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்லும். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அமமுகவை இணைத்து இக்கூட்டணிக்கு அமித் ஷா மேலும் பலம் சேர்த்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link