Tvk Lokesh Tamilselvan About Rasipuram Constituency,அப்பாவின் ஆசியோடு தான் தவெகவில் இணைந்தேன்..இங்கு அதிமுகவின் மவுசு குறைந்துவிட்டது : தவெக லோகேஷ் தமிழ்செவன் – dhanapal son lokesh tamilselvan about his winning chance in rasipuram constituency

அதிமுகவில் பல ஆண்டுகாலமாக தொடர்ந்து வரும் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களின் மகன் லோகேஷ் தமிழ்செவன் விஜய்யின் தவெகவில் இணைந்திருக்கிறார். அந்த கட்சியில் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வனுக்கு ராசிபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு தனபால் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பிறகு தான் அவர் சபாநாயகராக உயர்ந்தார். அதன் பிறகு தனபால் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அவிநாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

2021 ல் மட்டுமல்லாமல் 2016 ஆம் ஆண்டு தேர்தலிலும் அவிநாசி தொகுதியில் தான் போட்டியிட்டு வெற்றிபெற்றார் தனபால். ஆனால் தொடர்ந்து வெற்றிபெற்று வரும் தனபாலுக்கு இம்முறை அதிமுகவில் சீட் வழங்கப்படவில்லை. அவருக்கு சீட் மறுக்கப்பட்டதை தொடர்ந்து தனபால் வெளிப்படையாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

அப்பாவின் ஆசியோடு

ஆனாலும் அதிமுக என்ற கட்சியை விட்டு செல்லமாட்டேன் என உறுதியாக கூறியிருக்கின்றார். என்னதான் தனபால்அதிமுக தான் தன் ஆதியும் அந்தமும் என சொன்னாலும் தன் தந்தையை அதிமுக கண்டுகொள்ளவில்லை என்ற விரக்தியில் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். தனபால் வெற்றிபெற்று செல்வாக்காக இருந்து வந்த ராசிபுரம் தொகுதியில் அவரது மகனான லோகேஷ் தமிழ்செல்வன் தவெக சார்பாக போட்டியிடுகின்றார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், விஜய்யை எனக்கு ஆரம்பம் முதலே புடிக்கும். 2024 ஆம் ஆண்டு அவர் கட்சி துவங்கியதில் இருந்தே எனக்கு அக்கட்சியில் இணைய ஆர்வம் இருந்தது. அப்பாவிடம் பேசிவிட்டு அவரின் ஆசியோடு தான் தவெகவில் இணைந்தேன். இங்கு எனக்கு தகுந்த மரியாதை கொடுக்கப்படுகின்றது. விஜய் அவர்கள் என்னை ராசிபுரம் தொகுதியில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டார். எனக்கும் அந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் என்பதால் அதற்கு சம்மதித்தேன்.

வெற்றிவாய்ப்பு எப்படி ?

கண்டிப்பாக இங்கு எங்களுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ளது. திமுகவிற்கும் எங்களுக்கும் தான் இங்கு போட்டியே.என்னதான் ராசிபுரம் அதிமுகவின் கோட்டை என சொன்னாலும் இங்கு அவர்களின் மவுசு குறைந்துவிட்டது. அதிமுக மீதான அதிருப்தி வாக்குகள் எங்களுக்கு தான் கிடைக்கும் என பேசினார் லோகேஷ் தமிழ்செல்வன்.

இந்நிலையில் லோகேஷ் தமிழ்செல்வன் சொல்வதை போல தனபால் ஆதரவாளர்கள் அனைவரும் அதிமுக மீது அதிருப்தியில் தான் இருக்கின்றனர். குறிப்பாக அவருக்கு வாலாகித்த ராசிபுரம் தொகுதி மக்களும் அதிமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிகின்றது. எனவே அவர்களின் வாக்குகள் எல்லாம் தனபாலின் மகனான லோகேஷ் தமிழ்செவன் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் கடந்த முறை ராசிபுரம் தொகுதியில் திமுக சார்பாக மதிவேந்தன் தான் வெற்றிபெற்றார்.

தவெக vs திமுக

என்னதான் அதிமுக கோட்டை என ராசிபுரம் தொகுதியை சொன்னாலும் கடந்தமுறை திமுக தான் இங்கு வெற்றிபெற்றது. எனவே இம்முறை திமுகமற்றும் தவெக கட்சிகளுக்குள் இங்கு பலத்த போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அதே சமயம் அதிமுகவிற்கு இங்கு மவுசு குறைந்துவிட்டதாகவே சொல்லப்படுகின்றது. எனவே தான் இம்முறை ராசிபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் போட்டியிடவில்லை.

பதிலாக அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு தான் ராசிபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமே ராசிபுரம் இனி அதிமுக கோட்டை இல்லை என்பது நிரூபிக்கப்பட்டதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனாலும் கடந்தமுறை ராசிபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற மதிவேந்தனுக்கு தவெகவின் லோகேஷ் தமிழ்செவன் கடும் சவாலாக இருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே தவெக லோகேஷ் தமிழ்ச்செல்வனும் நம்பிக்கைக்கு ஏற்ப ராசிபுரம் மக்கள் அவரை வெற்றிபெற செய்வார்களா ? இல்லையா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Source link