Tvk Members Protest,கே.வி குப்பம் தொகுதி வேட்பாளரை அறிவித்த விஜய்..அதிருப்தியில் தவெகவினர் சிலர் தர்ணா போராட்டம் – tvk member prabhu supporter doing protest aganist kv kuppam candiate

தவெக வேட்பாளர்களை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் அறிவித்த நிலையில் ஒரு தரப்பு தவெகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

முக்கிய அம்சங்கள்:

தவெக வேட்பாளர் சர்ச்சை

தவெகவினர் தர்ணா போராட்டம்

tvk member prabhu protest
விஜய் இன்று தனது கட்சி சார்பாக 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார். இதில் இரண்டு தொகுதியில் விஜய் நேரடியாக போட்டியிடுகின்றார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகின்றார். எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனது கட்சியின் முதல் தேர்தலை தனித்து எதிர்கொள்கிறார் தவெக தலைவர் விஜய் . இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தான் விஜய் வேட்பாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அந்த நிகழ்ச்சி ஹோட்டலில் உள்ளே நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் ஹோட்டலுக்கு வெளியே தவெகவின் ஒரு தரப்பினர் தர்ணா போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. தவெக சார்பாக கேவி குப்பம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து சர்ச்சை எழுந்திருக்கிறது. கேவி குப்பம் தொகுதியில் தவெக சார்பாக தென்றல் என்பவரை வேட்பாளராக அறிவித்தார் விஜய்.
இதனால் கேவி குப்பம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடலாம் என எண்ணியிருந்த பிரபு என்பவரின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய்அறிவித்த கேவி குப்பம் தொகுதி வேட்பாளருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி பிரபு தரப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகின்றது. மேலும் முறையாக வேட்பாளர்கள் தேர்வு நடைபெறவில்லை என்றும் சிலர் குற்றம்ச்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் ஹோட்டலுக்கு உள்ளே தவெக வேட்பாளர்கள் ஒவ்வொருவறையாக அறிவித்து வந்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இடம்பெறும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் அறிவித்தார். இதற்காக பல மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் அங்கு வந்திருந்தனர். விஜய் வேட்பாளர்களை அறிவிப்பதை நேரலையில் வெளியே இருந்த ஆதரவாளர்கள் பார்த்து வந்தனர். அப்போது கேவி குப்பம் தொகுதியின் வேட்பாளர் தென்றல் என விஜய் அறிவித்தபோது பிரபு என்பவரின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்திக்கு ஆளானார்கள்.
பிரபு தான் கேவி குப்பம் தொகுதியின் தவெக வேட்பாளராவார் என அவர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் திடீரென தென்றல் என்பவரை வேட்பாளராக விஜய் அறிவித்ததை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் அதிருப்தியான பிரபுவின் தரப்பினர் ஹோட்டலுக்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கு இருந்த போலீசார் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினார்கள்.
இதனால் அங்கு பரபரப்பான நிலை நிலவியது. கேவி குப்பம் வேட்பாளரை மாற்றக்கோரி பிரபுவின் தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். கடைசி நேரத்தில் கேவி குப்பம் தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டதால் அவர்கள் அதிர்ச்சியடைந்ததாக சொல்கின்றனர். கேவி குப்பம் தொகுதியை சேர்ந்த பிரபுவிற்கு தான் அங்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என தர்ணா நடத்தியவர்கள் கூறினார்கள்.
தவெகவின் முக்கிய நிர்வாகிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் சாலையில் செல்லும் மக்களுக்கு இடையூறாக இருந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் தர்ணாவில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்களாம்.
ஆனாலும் தவெகநிர்வாகிகளுடன் கலந்துரையாட வேண்டும், அவர்களை சந்தித்து பேச வேண்டும் என ஹோட்டலின் முன் அவர்கள் காத்துகொண்டு இருப்பதாக சொல்லப்பட்டது. தவெக தலைவர் விஜய் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் திடீரென எழுந்த இந்த சர்ச்சை பேசும்பொருளாக மாறியிருக்கின்றது. விஜய் எப்போதெல்லாம் கூட்டம் நடத்துகின்றாரோ ? அப்போதெல்லாம் இதுபோல ஏதேனும் ஒரு சர்ச்சை எழுந்து தான் வருகின்றது என வருத்தத்துடன் சொல்கின்றனர் தவெகவின் ஆதரவாளர்கள்.

விஜய் கோயம்புத்தூர் வருகையால் அரசியல் களம் மாறுமா..?

இருப்பினும் கேவி குப்பம் தொகுதி வேட்பாளர் சர்ச்சையை நிர்வாகிகளோ அல்லது கட்சி தலைவர் விஜய்யோ கூடிய விரைவில் சரி செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தவெக கட்சியில் மட்டும் இந்த நிலை உள்ளதா ? என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். இந்த தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளிலும் இந்த நிலை இருக்க தான் செய்கின்றது. ஒரு வேட்பாளரை அறிவித்தால் அந்த வாய்ப்பு கிடைக்கும் என நம்பியிருந்த மற்றொரு வேட்பாளர் அவர்களது அதிருப்தியை வெளிப்படுத்தி தான் வருகின்றனர்.இதுபோல பல கட்சிகளில் நடந்து தான் வருகின்றது.