Tvk Nirmal Kumar About Admk,அதிமுக என்ற கட்சியே தேர்தலுக்கு பிறகு இருக்காது..எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வழி இல்லை : தவெக நிர்மல் குமார் – tvk nirmal kumar criticise admk and edappadi palanisamy

தவெக தலைவர் விஜய் இன்று தனது பரப்புரையை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து தவெக கட்சியை சேர்ந்த நிர்மல் குமார் அதிமுக கட்சி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். மேலும் ராஜேந்திர பாலாஜியின் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்திருக்கின்றார்

முக்கிய அம்சங்கள்:

அதிமுக என்ற கட்சியே இருக்காது

தவெக நிர்மல் குமார் விமர்சனம்

tvk nirmal kumarb about eps
திமுக மற்றும் அதிமுக என்கின்ற இரு கட்சிகளுக்கும் இடையே தான் போட்டியே என இரு கட்சியினரும் கூறி வருகின்றனர். ஆனால் அதே சமயம் விஜய்யின் தவெக கட்சியினர் எங்களுக்கும் திமுகவிற்கும் தான் போட்டியே என சொல்கின்றனர். தீய சக்தி திமுகவை ஆட்சியில் இருந்து நீக்கவேண்டும் என தொடர்ந்து பேசி வருகின்றார் தவெக தலைவர் விஜய் . அவர் மட்டுமல்லாமல் தவெக நிர்வாகிகளும் இதே கருத்தை தான் கூறி வருகின்றனர்.அதோடு மட்டுமல்லாமல் எதிர்க்கட்சி அதிமுகவையும் தற்போது கடுமையான முறையில் தவெகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தவெக நிர்வாகி நிர்மல் குமார் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். அவர் பேசும்போது தேர்தலுக்கு பிறகு அதிமுக என்கின்ற ஒரு கட்சியே இருக்காது என்றார் தவெக நிர்மல் குமார் .
மேலும் அவர் பேசுகையில், தேர்தலுக்கு பிறகு அதிமுகஎன்கின்ற ஒரு கட்சியே இருக்காது. அதிமுகவிற்கு வாக்களிப்பது என்பது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம். இந்த தேர்தலுக்கு பிறகு கண்டிப்பாக அதிமுக கட்சி இருக்காது, அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்க மாட்டார். இது அவருக்கே தெரியும். ஆனால் வேறு வழியில்லாமல் தான் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கின்றனர்.
பாஜகவின் கட்டுப்பாட்டில் தான் அதிமுக இருக்கின்றது. தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் அதிமுகவை இணைத்துக்கொள்வார்கள். பாஜகவுடன் அதிமுக சேர்க்கப்படும். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கஷ்டப்பட்டு துவங்கிய கட்சி, கடந்த 30 வருடங்களாக அம்மா ஜெயலலிதா அவர்களால் காப்பாற்றுபட்டு வந்த கட்சி தற்போது பாஜகவின் பிடியில் உள்ளது. எனவே அதிமுகவிற்கு வாக்களிப்பது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம்.
இதன் காரணமாக அதிமுகவிற்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். எங்களுக்கு இருக்கும் ஒரே போட்டி திமுக தான். திமுகவிற்கு 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் என்ன நிலை ஏற்பட்டதோ அதே நிலை தான் தற்போதும் ஏற்படும். அவர்கள் எதிர்க்கட்சியாக கூட இருக்கமாட்டார்கள் என்றார் தவெக நிர்மல் குமார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய்இன்று பெரம்பூரில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போதும் அவர் திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே தான் போட்டியே என குறிப்பிட்டார். இதுகுறித்து அதிமுகவின் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டபோது, விஜய் ஸ்கூல் பிள்ளை போல பேசுகின்றார். அதிமுக மற்றும் திமுக என்கின்ற இரு சிங்கங்களுக்கு இடையே தான் போட்டியே, இதெல்லாம் புரியாமல் விஜய் விளையாட்டுத்தனமாக பேசுகின்றார் என்றார்.
இந்நிலையில் தற்போது இதுகுறித்து தவெக நிர்மல் குமார் தனது கருத்தினை கூறியிருக்கின்றார். அவர் கூறியது, அதிமுகவினருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்களுக்கு எல்லாம் ஒன்றே ஒன்று தான் நான் சொல்லிக்கொள்கிறேன். தேர்தலில் டெபாசிட்டாவது வாங்க பாருங்கள். ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை அதிமுகவின் பொதுச்செயலாளரை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அப்படி விமர்சனம் செய்தவர்களுடனே அதிமுக தற்போது கூட்டணி வைத்திருக்கின்றனர் என கூறியிருக்கின்றார் தவெக நிர்மல் குமார். இவ்வாறு திமுக அதிமுக இடையே ஒரு மோதல் போய்க்கொண்டு இருப்பதை போல, திமுக-தவெக -அதிமுக என்கின்ற மும்முனை மோதலும் மறுபக்கம் தீவிரமாக சென்றுகொண்டு இருக்கின்றது என்று தான் சொல்லவேண்டும்.

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்…யார் இந்த தனபால்?

இந்த மூன்று கட்சிகளுக்கும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்துகொண்டு தான் வருகின்றனர். ஆனால் திமுகவோ அல்லது அதிமுகவோ தவெக எங்களுக்கு போட்டி என கூறவில்லை. போட்டியே திமுக மற்றும் அதிமுக இடையே தான் என்கின்றனர். ஆனால் தவெகவோ எங்களுக்கும் திமுகவிற்கும் தான் போட்டியே, அதிமுக ஒரு பொருட்டே இல்லை என்கின்றனர். ஆனால் என்ன இருந்தாலும் இந்த சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக மும்முனை போட்டி நிலவும் என்பதே பெரும்பாலானோரின் கணிப்பாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.