Tvk Velmurugan Candidates List,தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தான் முடிவெடுக்கும்:தவாக தலைவர் வேல்முருகன் – tvk velmurugan says his party member will decide his election contest

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றார். தற்போது வேட்பாளர்களை அறிவித்த வேல்முருகன் தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தான் முடிவெடுக்கும் என தெரிவித்தார்

முக்கிய அம்சங்கள்:

தேர்தலில் போட்டியிடுவேனா ?

வேல்முருகன் விளக்கம்

velmurugan candidates
திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சி தான் தமிழக வாழ்வுரிமை கட்சி. இக்கட்சியின் தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். திமுகவுடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் அவர்கள் கேட்ட கூடுதல் தொகுதிகளையும் திமுக ஒதுக்கவில்லை. குறிப்பாக தவாக தலைவர் வேல்முருகன் வைத்த கோரிக்கைகளை திமுக நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி கொடுக்கவில்லை.இதுபோன்ற காரணங்களால் தவாக தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து விலகினார். இதனைத்தொடர்ந்து வருகின்ற தேர்தலில் தனித்து போட்டியிட இருப்பதாகவும் அறிவித்தார் வேல்முருகன். இந்நிலையில் தவாக தனித்து போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்தார் வேல்முருகன்
முதற்கட்டமாக நூறு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் வேல்முருகன். ஆனால் அந்த வேட்பாளர்கள் பட்டியலில் வேல்முருகனின் பெயர் இல்லை. ஏற்கனவே அவர் இந்த தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை என கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து நெய்வேலி தொகுதியில் வேல்முருகன் போட்டியிடலாம் என்றும் சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது நெய்வேலி தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்தார் வேல்முருகன். இதையடுத்து வேல்முருகன் பண்ரூட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதா ? என்ற கேள்விகள் எழுந்தன. இதுகுறித்து அவரிடமும் கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த வேல்முருகன், பண்ரூட்டி தொகுதிக்கு பலத்த போட்டி நிலவி வருகின்றது. பல விருப்பமனுக்கள் வந்துள்ளன. பல திடுக்கிடும் சம்பவங்கள் காத்துகொண்டு இருக்கின்றன. நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தான் முடிவெடுக்கும் என்றார் வேல்முருகன்.
இதனைத்தொடர்ந்து வேல்முருகன் முன்பு போல தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என திட்டவட்டமாக கூறவில்லை. தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தான் முடிவெடுக்கும் என கூறியிருக்கின்றார். இதை வைத்து பார்க்கையில் அவர் வருகின்ற தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகின்றது. கட்சி முடிவின் பெயரில் வேல்முருகன் இந்த தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
அதுவும் குறிப்பாக பண்ரூட்டி தொகுதியில் வேல்முருகன் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஒருவேளை வேல்முருகன் பண்ரூட்டி தொகுதியில் போட்டியிட்டால் அவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி வாய்ப்பு இருக்கும் என தெரிகின்றது. கடந்தமுறை 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வேல்முருகன் பண்ரூட்டி தொகுதியில் போட்டியிட்ட வெற்றிபெற்றார். அந்த தொகுதியில் வேல்முருகனுக்கு மிகப்பெரிய அளவில் செல்வாக்கு உள்ளது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது கண்டிப்பாக பண்ரூட்டி தொகுதியில் வேல்முருகன் போட்டியிட்டால் அவருக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாகவே இருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் மூன்றாம் தேதி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த இருக்கின்றார் வேல்முருகன். அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறாராம் வேல்முருகன்.

திமுக கூட்டணியில் இருந்து பாஜகவுக்கு செல்லும் கட்சி எது? திருமாவளவன் பேட்டி ..!

மறுபக்கம் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வேல்முருகன் வெளியிட இருக்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் நூறு தொகுதிகளுக்கு மேல் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிட திட்டமிட்டு வருகின்றோம். கண்டிப்பாக நூறு தொகுதிகளுக்கு மேல் நாங்கள் போட்டியிடுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார் வேல்முருகன். இதையெல்லாம் வைத்து பார்க்கையில் இன்னும் ஓரிரு நாட்களுள் வேல்முருகன் தான் தேர்தலில் போட்டியிடுவேனா ? இல்லையா ? என்பதனை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.