Tvk Vijay Condemns,பொன்ராஜ் மீது புகார் கொடுக்க டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்ற தவெக தலைவர் விஜய் – tvk leader vijay complaint aganist dmk supporter ponraj in dgp office

தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.திடீரென டிஜிபி அலுவலகத்திற்கு விஜய் வருகை தருவது குறித்து கேள்விகள் எழுந்து வருகின்றன

tvk vijay complaint
தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் தற்போது சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வருகை தந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. திடீரென தவெக தலைவர் விஜய் டிஜிபி அலுவலகத்திற்கு வருகை தந்ததற்கான காரணம் குறித்து அதிகாரபூர்வமாக இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனாலும் இன்று தவெக தலைவர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.திமுக ஆதரவாளராக இருக்கும் ஒருவர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை சேர்ந்த பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசியதை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.ஒருவேளை இதுகுறித்து புகார் கொடுப்பதற்காக விஜய் டிஜிபி அலுவலகத்திற்கு வருகை தந்திருப்பாரா ? என்ற சந்தேகம் எழுகின்றது.இந்நிலையில் தற்போது விஜய் டிஜிபி அலுவலகத்திற்கு எதற்காக சென்றிருக்கின்றார் என்பது குறித்தான காரணம் தெரிய வந்துள்ளது.நாம் கணித்ததை போலவே தமிழக வெற்றிக்கழகம் கட்சியை சேர்த்த பெண்களை இழிவாக பேசிய பொன்ராஜ் மீது புகார் கொடுக்கவே டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்றிருக்கின்றாராம் விஜய்.அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என நேரில் சென்று மனு வழங்கியிருக்கிறார் தவெக தலைவர்
இந்நிலையில் விஜய்டிஜிபி அவர்களிடம் கொடுத்த புகார் மனு குறித்தான தகவல் தற்போது அதிகாரபூர்வமாக கிடைத்துள்ளது. தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் பெண்களை தரம் தாழ்ந்து பேசி வரும் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தான் விஜய் டிஜிபியிடம் புகார் மனு கொடுத்திருக்கின்றார்.
இதைப்பற்றி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். அந்த அறிக்கையில், ஆளும்கட்சியான திமுகவின் ஆதரவாளராக செயல்பட்டு வருபவர் தான் பொன்ராஜ். அவர் தமிழகம் முழுக்க இருக்கும் என் அம்மா, தங்கை, அக்கா என ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பெண்களையும் விலைமாதர் என அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவே கூறி மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து பேசியிருக்கிறார்.
இப்படி ஒரு சொல்லை சொல்லி மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருக்கின்றார். இவ்வாறு ஒட்டுமொத்த பெண்களையும் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் பொன்ராஜ் ஆளும்கட்சியான திமுகவின் அரவணைப்பில் இருக்கின்றார். திமுக அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது என்ற நினைப்பில் எல்லை மீறி அநாகரிகமாக பேசி வருகின்றார் பொன்ராஜ்
எனவே இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் தவெக தலைவர் விஜய். இந்த புகாரை அவர் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்றே வழங்கியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் பெண்களின் கோரிக்கையாக உள்ளது.
தவெக என்கின்ற கட்சியை சீண்டுவதாக நினைத்து ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கும் செயலில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மண்ணை கவ்வப்போவது உறுதி என இதற்கு முந்தைய அறிக்கையில் தெரிவித்தார் விஜய்.இவ்வாறு தவெக கட்சியை சேர்ந்த பெண்களை கீழ்த்தரமாக விமர்சித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையோடு நிறுத்திவிடாமல் விஜய் நேரிலேயே டிஜிபி அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்திருக்கின்றார். தவெக தலைவரின் இந்த செயலை அக்கட்சியை சேர்ந்த பெண்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பெண்களும் வரவேற்பதாக தெரிவது குறிப்பிடத்தக்கது