Tvk Vijay Met Election Commissioner,தவெக தலைவர் விஜய் தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார் – vijay went to meet election commissioner directly reagarding perambur campaign

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் தலைமை செயலகத்திற்கு நேரடியாக வருகை தந்திருக்கின்றார். அவர் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு கொடுத்திருப்பதாக தகவல். பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து விஜய் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்திருக்கின்றார். அந்த மனுவில் பத்து அம்சங்கள் இருப்பதாக தகவல்

தவெக தலைவர் இன்றுமுதல் தனது பரப்புரையை துவங்க இருந்தார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுகின்றனர். 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட முடிவெடுத்துள்ளார் தவெக தலைவர் விஜய. அந்த வகையில் மார்ச் 28 ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் இருந்து தனது பரப்புரையை துவங்க விஜய் திட்டமிட்டு அறிவித்தார்.

ஆனால் நேற்றைய தினம் விஜய்யின் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விஜய் பரப்புரைக்காக தேர்வு செய்திருக்கும் இடம் நெருக்கடியான இடம் என்பதால் அங்கு பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்க முடியாது என காவல்துறை கூறியிருக்கின்றனர். மேலும் மாற்று இடத்தை தேர்வு செய்யும்படியும் காவல்துறை கூறியுள்ளனர்.

இதனால் தவெகவினர் அதிருப்தியில் ஆழ்ந்தார்கள். சட்டமன்ற தேர்தலுக்கான விஜய்யின் முதல் பரப்புரை என்பதால் அவரது ஆதவராளர்கள் ஆவலாக இந்த பரப்புரைக்கு காத்திருந்தனர். ஆனால் பரப்புரைக்கு ஒரு நாள் முன்னதாக கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் இதில் சூழ்ச்சி இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத சமயத்தில் இதுபோல தங்களது பரப்புரையை தடுப்பது சரியில்லை என விஜய் தரப்பு கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்சமயம் தவெக தலைவர் விஜய்யே நேரடியாக தலைமை செயலகம் சென்று இதுகுறித்து புகார் மனு கொடுத்திருக்கின்றார். தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து தனது பரப்புரைக்கு தடை விதிப்பது குறித்து புகார் மனு கொடுத்துள்ளார் விஜய்.

அந்த புகார் மனுவில் பத்து அம்சங்கள் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகின்றது. திமுகவிற்கு ஆதரவாக சிலர் செயல்படுகின்றனர். அதன் காரணமாக வேண்டுமென்ற காரணங்களை கூறி தன் பரப்புரையை தடுத்து நிறுத்துகின்றனர் என்பது போன்ற பத்து அம்சங்கள் நிறைந்த புகார் மனுவை விஜய் வழங்கியிருக்கிறார்.

இந்நிலையில் இதுவரை தவெக கட்சியின் தலைவரான விஜய் நேரடியாக பொதுமக்களை சந்திக்கவில்லை, பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை, களத்திற்கு வரவில்லை என்பது போல பல விமர்சனங்கள் எழுந்தன. பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் மக்களே இதுகுறித்து விமர்சித்து பேசி வருகின்றனர். ஆனால் ஒரு சில தினங்களுக்கு முன்பு விஜய் பொன்ராஜ் மீது புகார் கொடுத்து நேரடியாக டிஜிபி அலுவலகத்திற்கு வந்தார்.

தன் கட்சி பெண்கள் குறித்து பொன்ராஜ் இழிவாக பேசியதை தொடர்ந்து விஜய் நேரடியாக சென்று புகார் கொடுத்தார். அதனைத்தொடர்ந்து தற்போது தலைமை செயலகத்திற்கு நேரடியாகவே வந்து தேர்தல் அதிகாரியை சந்தித்துள்ளார். இவ்வாறு விஜய் நேரடியாக களத்தில் இறங்குவதை பார்த்து அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையில் இருக்கின்றனர்.

தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதி இதுதானா? அவரே கொடுத்த ‘Clue’!

தேர்தல் நேரம் நெருங்கி வரும் நிலையில் விஜய்யின் இந்த மாற்றம் வரவேற்கப்படுவதாக தெரிகின்றது. இதற்கிடையில் நாளை தவெக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுகின்றனர். முதலில் மார்ச் 27 ஆம் தேதியே வேட்பாளர் பட்டியலை வெளியிட விஜய் முடிவெடுத்திருந்தார். ஆனால் சில காரணங்களால் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதை ஒரு நாள் தள்ளி வைத்திருக்கின்றார் தவெக தலைவர் விஜய். இதனைத்தொடர்ந்து நாளை தனியார் விடுதியில் நடக்கும் நிகழ்ச்சியின் மூலம் தவெக வேட்பாளர்கள் பட்டியலை விஜய் வெளியிடுகிறார்.

Source link