Udhayanidhi Staln About Eps,உதயநிதி ஸ்டாலின் வயது தான் என் அரசியல் அனுபவம் என்ற எடப்பாடி பழனிச்சாமி..பதிலடி கொடுத்த துணை முதலமைச்சர் – udhayanidhi stalin reply to edappadi palanisamy on political experience

துணைமுதல்மைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை செய்து வருகின்றார். அந்த பரப்புரையில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்திருக்கின்றார் உதயநிதி ஸ்டாலின். தனது அனுபவம் குறித்து பேசி பதிலடி கொடுத்துள்ளார் துணை முதலமைச்சர்

முக்கிய அம்சங்கள்:

எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி

udhayanidhi stalin vs eps
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் களத்தில் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். தற்போது ஆம்பூர் தொகுதியில் திமுகவின் வேட்பாளருக்காக பரப்புரை செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். கடந்த தேர்தலின் போதே உதயநிதி ஸ்டாலினின் பரப்புரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரின் பரப்புரை பேச்சுக்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலினின் பரப்புரை பெரும் அளவில் சென்றடைந்தது.இதனைத்தொடர்ந்து துணை முதலமைச்சராக வளர்ந்து நிற்கும் உதயநிதியின் தற்போதைய பரப்புரைகளும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து அவரை பதில் விமர்சனம் செய்து பேசியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
அதாவது எடப்பாடி பழனிச்சாமி தனது பரப்புரையின் போது, உதயநிதி ஸ்டாலின் தரக்குறைவாக பேசுகின்றார், என்னுடைய வயது தான் அவரின் அரசியல் அனுபவம் என எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். இதற்கு தற்போது உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியது, அவருடைய அரசியல் அனுபவம் எனக்கு கிடையாது தான், நான் ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால் எனக்கும் அனுபவங்கள் உண்டு. அது என்ன தெரியுமா ? எந்த மிரட்டல்களுக்கு பயப்படாத அனுபவம் தான் என் அனுபவம் ,யாராக இருந்தாலும் குறிப்பாக சங்கிகளின் மிரட்டல்களுக்கு பயப்படாத அனுபவம் என்னிடம் உள்ளது. மக்களோடு மக்களாக களத்தில் நிற்கும் அனுபவம் என்னிடம் உள்ளது. சுயமரியாதையோடு இருக்கும் அனுபவம் என்னுடைய அனுபவம். இதெல்லாம் என் அனுபவம். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன அனுபவம் இருக்கு தெரியுமா ? தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடமானம் வைத்தது தான் அவருடைய அனுபவம்.
அப்படிப்பட்ட அனுபவம் எனக்கு தேவையே இல்லை என பேசி எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்தார் உதயநிதி ஸ்டாலின். மேலும் எடப்பாடி பழனிசாமியை மோடியின் அடிமை என மீண்டும் பேசி விமர்சித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். என்றைக்குமே தமிழ்நாடு பாஜகவிற்கு அடிபணியாது என்பதை நாம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும் என்றார் துணைமுதல்மைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அதிமுக ஆட்சி மீண்டும் வந்தால் தமிழகம் எந்த நிலைக்கு போகும் என்பதை மக்கள் அனைவரும் அறிவார்கள். எனவே திமுகவை வெற்றிபெற செய்ய வேண்டும் என கூறி பரப்புரை செய்தார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மட்டுமல்லாமல் திமுக சார்பாக பரப்புரை செய்யும் அனைவரும் அதிமுகவை தான் டார்கெட் செய்து பேசுகின்றனர். ஆனால் திமுக தான் தங்களது அரசியல் எதிரி என சொல்லும் தவெகவை தாக்கி பரப்புரை செய்வதில்லை.
அதைப்போல அதிமுகவும் திமுகவிற்கும் எங்களுக்கும் தான் போட்டியே என சொல்லி பரப்புரை செய்கின்றனர். இவ்வாறு போய்க்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சிற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த முறை செங்கலை வைத்து பிரச்சாரம் செய்து தாக்கத்தை ஏற்படுத்திய உதயநிதி ஸ்டாலின் இம்முறை எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் அடிமையாக இருக்கின்றார் என கூறிக்கொண்டு வருகின்றார்.
எங்கு சென்றாலும் திமுகவினர் குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் அதிமுக பாஜகவின் முரட்டு அடிமை என்றே குறிப்பிட்டு பேசி வருகின்றார்.. ஏற்கனவே இதுபோல உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பாஜகவை சேர்ந்தவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். அடிமை என்பது போன்ற தரம் குறைவான வார்த்தைகளை உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்துகிறார் என சொன்னார்கள்.

விஜய் பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் நச் பதிலடி! அறிவுத் திருவிழா விவகாரம்

தற்போது மீண்டும் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை அதே வார்த்தையை கூறியே விமர்சனம் செய்துள்ளார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதை குறிப்பிட்டே திமுகவினர் விமர்சனம் செய்துகொண்டு வருகின்றனர். இந்த ஒரு காரணம் காரணமாக அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்படுமா ? இல்லையா ? என்பது போக போக தான் தெரியும்.