Vaiko About Mk Stalin,முதலமைச்சர் முக ஸ்டாலின் வாகனத்தை சோதனை செய்கிறார்கள்..பிரதமர் வாகனத்தை சோதனை செய்வார்களா ?:வைகோ – vaiko questioned why chief minister mk stalin vehicle inspection happening continously

மதிமுக தலைவர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் பரப்புரை செல்லும்போது அவரது வாகனத்தை சோதனை செய்வது குறித்து கேள்வி எழுப்பினார் வைகோ

முக்கிய அம்சங்கள்:

முதல்வர் வாகனத்தை மட்டும் சோதனை செய்வது ஏன் ?

வைகோ கேள்வி

vaiko about mk stalin
திமுக கூட்டணியில் நீடித்து வரும் மதிமுக தலைவர் வைகோ சமீபத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வாகனத்தை சோதனை செய்வது குறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றார். முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தன் கட்சியின் வேட்பாளர்களுக்காக தீவிரமாக பரப்புரை செய்து வருகின்றார். அப்போது அவர் செல்லும் வாகனத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். அவர் வாகனத்தை மட்டுமல்லாமல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றன.ஆனால் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் வாகனத்தை 24 மணி நேரத்திற்குள் பலமுறை சோதனை செய்கின்றார்கள் என கூறியிருக்கின்றார் வைகோ. இதுகுறித்து அவர் பேசியது, முதலமைச்சர் முக ஸ்டாலினின் வாகனத்தை சோதனை செய்கின்றார்கள். முதலமைச்சர் வாகனத்தில் அமர்ந்திருந்தபோதே தீவிரமாக சோதனை செய்தார்கள்.அதை நான் தவறாக சொல்லவில்லை.
ஆனால் அதே சமயம் அனைத்து மாநிலங்களிலும் இதுபோல் முதலமைச்சர் வாகனத்தை சோதனை செய்வார்களா ? குறிப்பாக பாஜகஆளுகின்ற மாநிலத்தில் அம்மாநில முதலமைச்சரின் வாகனத்தை சோதனை செய்வார்களா ? இல்லை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினின் வாகனத்தை சோதனை செய்வதில் உள்நோக்கம் இருக்கின்றதா ? மத்திய அரசிற்கு பக்கபலமாக அவர்கள் செயல்படுகின்றார்களா ? ஒருநாள் சோதனை நடத்தினால் பரவாயில்லை.
ஆனால் ஒரு நாளைக்கு பல முறை சோதனை செய்கின்றார்கள். நான் ஒரே ஒரு கேள்வியை தான் கேட்கின்றேன். நாட்டின் பிரதமர் விமானத்தில் வருகின்றார், இங்கு வந்து ரோடு ஷோ செய்கின்றார். ஆவரிடத்திலும் சோதனை செய்வார்களா ? அனைவருக்கும் ஒரே மாதிரியான அளவுகோல் தான் இருக்க வேண்டும். பாரபட்சம் காட்டுவது சரியல்ல, பிரதமர் வாகனத்தை, உள்துறை அமைச்சர் வரும் வாகனத்தை சோதனை செய்யாதவர்கள் வேண்டுமென்றே தமிழக முதலமைச்சர் வாகனத்தில் நடத்தப்பட்டது.
எனவே முதல்வர் வாகனத்தை சோதனை செய்தது போல பிரதமர், மத்திய அமைச்சர்களின் வாகனத்தையும் சோதனை செய்தால் தான் நடுநிலையோடு இருக்கின்றனர் என அர்த்தம். இருப்பினும் இதுபோன்ற சோதனைகளுக்கு எல்லாம் திமுக அஞ்சாது. இந்த சோதனைகளுக்கு எல்லாம் அசைந்து கொடுக்காது திமுக, முதலமைச்சர் முக ஸ்டாலினும் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்.
ஆனால் மக்களுக்கு இதுகுறித்து தெரிய வேண்டும் என்பதற்காக தான் சொல்கின்றேன் என்றார் வைகோ. இந்நிலையில் வைகோவின் பேச்சை கேட்ட சிலர், அப்படியென்றால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் வாகனத்தையும் சோதனை செய்கிறார்களே ? அதற்கு என்ன அர்த்தம் என பதில் கேள்வி கேட்கின்றனர்.
ஆனால் அவர்கள் வாகனத்தை எல்லாம் ஒருமுறை தான் சோதனை செய்கின்றார்கள். ஆனால் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வாகனத்தை தொடர்ந்து பலமுறை சோதனை செய்து வருகின்றனர். அதுதான் தற்போது சர்ச்சையாகி இருக்கின்றது. இதுகுறித்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக தலைவர் வைகோ குறிப்பிட்டு பேசியுள்ளார். இதனைத்தொடர்ந்து இந்த விஷயம் பரபரப்பாக விவாதிக்கப்படும் பொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முதல்வர் வாகனத்தை சோதனையிடுவது தவறு என சொல்லி குறைகூறவில்லை. அதைப்போல அனைவரின் வாகனத்தையும் சோதனை செய்ய வேண்டும் என்று தான் சொல்வதாக வைகோபேசினார். எனவே வைகோ சொல்வதும் சரி தான் என திமுக ஆதரவாளர்கள் உட்பட பொதுமக்கள் சிலரும் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Sabarisen Drives Chief Minister MK Stalin in Car: முதல்வர் MK Stalin-ஐ காரில் அழைத்து சென்ற Sabarisen

முதலமைச்சர் வாகனத்தில் இருக்கும்போதே ஒரே நாளில் பலமுறை அந்த வாகனத்தை சோதனை செய்வது சரியாக தெரியவில்லை என திமுக ஆதரவாளர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் கூட பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருகை தந்தார். அங்கு ரோடு ஷோ கூட நடத்தினார். ஆனால் அவர்கள் வரும் வாகனங்களை சோதனை செய்யவில்லை என்பது தான் வைகோவின் குற்றச்சாட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.