செல்லூர் ராஜுவின் செல்வாக்கு மிக்க இந்த தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என திமுக புது யுக்திகளை கையாண்டு வருவதாக தெரிகின்றது. எனவே அந்த புது யுக்திகளை வீழ்த்தி மீண்டும் மதுரை மேற்கு தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் பரப்புரை செய்து வருகின்றார் செல்லூர் ராஜு. இந்நிலையில் நேற்று நடந்த பரப்புரையில் செல்லூர் ராஜுவிற்கு ஆதரவாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரை செய்தார்.
அண்ணாமலை பற்றி செல்லூர் ராஜு
அப்போது அண்ணாமலையை பாராட்டி செல்லூர் ராஜுபேசியது பேசும்பொருளானது. அதாவது தமிழகத்தில் பாஜக சிறப்பான முறையில் வளர்ச்சியடைந்திருக்கின்றது என்றால் அதற்கு அண்ணாமலை தான் மிக முக்கிய காரணம் என பேசி புகழ்ந்து இருக்கின்றார் செல்லூர் ராஜு. அதோடு மட்டுமல்லாமல் முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் தான் அண்ணாமலை.
தெய்வீகமும் தேசமும் இரு கண்கள் என போற்றி பாதுகாத்து வந்த பசும்பொன் ஐயா முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் தான் அண்ணாமலை. மிகவும் இளம் வயதிலேயே தேசிய இயக்கத்தில் சேர்ந்து சிறப்பான பணி செய்து மக்களையும் இளைஞர்களையும் கவர்ந்தார் அண்ணாமலை. அவர் பலருக்கும் உதாரணமாக இருக்கின்றார் என்றார் செல்லூர் ராஜு.
செல்லூர் ராஜு கருத்து
இந்நிலையில் முத்துராமலிங்கத் தேவருடன் அண்ணாமலையை செல்லூர் ராஜு ஒப்பிட்டு பேசியதற்கு பலதரப்பட்ட கருத்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. பெரும்பாலானோர் செல்லூர் ராஜுவின் இந்த கருத்திற்கு எதிர்மறையான பதில் கருத்துக்களை கூறி வருகின்றனர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்கையில் திராவிட கழக தலைவர் வீரமணி தன் கருத்தை கூறியுள்ளார். அவரிடம் செல்லூர் ராஜு அண்ணாமலையை முத்துராமலிங்கத் தேவருடன் ஒப்பிட்டு பேசியதாக செய்தியாளர்கள் கூறினார்கள்.
வீரமணி பதில்
அதற்கு கி.வீரமணி, செல்லூர் ராஜு அவ்வப்போது இதுபோல பல செய்திகளை இளைப்பாறுவதற்காக சொல்வார். எனவே நாங்கள் எல்லோரும் அவரை ஒரு இளைப்பாறுவதற்காக பேசும் பேச்சாளர் என்றே கருதுவதாக கூறினார் வீரமணி. இவ்வாறு செல்லூர் ராஜுவின் பேச்சுக்கு கி.வீரமணி தன் கருத்தினை கூறியிருக்கின்றார்.
இந்நிலையில் என்னதான் செல்லூர் ராஜு பேசுவது அவ்வப்போது விமர்சனங்களுக்கு உண்டாலும் மதுரை மேற்கு தொகுதியில் அவரை அடித்துக்கொள்ள முடியாது என்பது போல தான் கருத்துக்கணிப்புகள் வருகின்றன. என்னதான் இம்முறை மதுரை மேற்கு தொகுதியில் பலத்த போட்டி இருந்தாலும் செல்லூர் ராஜுவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாகவே இருப்பதாக கணிப்புகள் வருகின்றன. இருப்பினும் செல்லூர் ராஜுவின் இந்த கருத்துக்கள் ஒருபக்கம் விமர்சனங்களை பெற்று தான் வருகின்றது.
அதிமுக கூட்டணியின் ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் முத்துராமலிங்கத் தேவரையும் அண்ணாமலையும் செல்லூர் ராஜு ஒப்பிட்டு பேசியதை ஆதரித்தாலும் கூட பொதுவான மக்கள் செல்லூர் ராஜுவின் இந்த கருத்தை ஆதரிப்பதாக தெரியவில்லை. எதிர்மறை விமர்சனங்களும் கருத்துக்களும் தான் பெரும்பாலும் வருகின்றன. மேலும் கி.வீரமணி பேசுவதை பார்த்தால்,செல்லூர் ராஜுவின் பேச்சை மிகப்பெரிய அளவில் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பது போல பேசியிருக்கிறார். இவ்வாறு செல்லூர் ராஜுவின் இந்த கருத்துக்கள் பேசும்பொருளாக மாறியிருக்கின்றது.
