ஆனால் அந்த கேள்விக்கு தனது முதல் மாநாட்டின் மூலமே பதில் கொடுத்தார் விஜய். தவெக முதல் மாநாட்டில் விஜய் எதிர்பாராத விதமாக மிகவும் ஆக்ரோஷமாக ஒரு அரசியல் கட்சி தலைவர் எப்படி பேசவேண்டுமோ ? அப்படி பேசினார். தனது முதல் மாநாட்டிலேயே மக்களின் மிகப்பெரிய கேள்விக்கு பதிலளித்த விஜய்யின் மீது தற்போது பல கேள்விகள் இருந்து வருகின்றன.
விஜய்க்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி
விஜய்யால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா ? ஒரு அரசியல் கட்சி தலைவராக தொடர்ந்து தனது கொள்கைகளில் நீடித்து இருக்க முடியுமா? நெருக்கடிகளை சமாளிக்க முடியுமா ? என பல கேள்விகள் தற்போது கேட்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி விஜய் குறித்து ஒரு கேள்வியை முன் வைத்து இருக்கின்றார்.
விஜய்க்கு ஆளுமை தன்மையும் நிர்வாக தன்மையும் உள்ளதா ? என சந்தேகம் இருப்பதாக பேசியுள்ளார் கார்த்தி சிதம்பரம். மேலும் அவர் கூறியது, விஜய் ஒரு சிறந்த நடிகர் என்பது தெரியும். திரைத்துறையில் அவர் பல சாதனைகளை செய்துள்ளார். அவரின் படங்கள் வசூலில் சாதித்துள்ளது என்பதெல்லாம் உண்மை தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் விஜய்க்கு ஆளும் தன்மை உள்ளதா ? என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கின்றது.
விஜய்யிடம் ஆளும் திறன் உள்ளதா ?
விஜய்யால் ஒரு நிகழ்ச்சியை கட்டுக்கோப்பாக நடத்த முடியுமா ? என சந்தேகம் உள்ளது. பொதுமக்களையும் ரசிகர்களையும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. பலமுறை அவர் தன் வாகனத்தை பின்தொடர வேண்டாம் என கூறிவிட்டார். ஆனாலும் அதனை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் கட்சி துவங்கி இரண்டு ஆண்டுகள் ஆனபோதும் எந்த ஒரு அரசியல் தலைவர்களையும் விஜய் சந்தித்து பேசியதாக தெரியவில்லை.
எந்த ஒரு கருத்தையும் அவர் பதிவு செய்வதில்லை. கோப்புகளை படித்து அதில் இருக்கும் விஷயங்களை உள்வாங்கி தன் கருத்தினை கூறி ஒரு முடிவை எடுக்கும் திறன் விஜய்யிடம் இருக்கா ? நிர்வாக திறன் உள்ளதா ? என பல சந்தேகம் உள்ளது. அவரது கட்சியையும் ரசிகர்களையுமே அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்படி இருக்கையில் நிர்வாகத்திறன் இருக்கின்றதா ? என மிகப்பெரிய சந்தேகம் உள்ளது. தனிப்பட்ட முறையில் அவரிடம் ஆளும் திறன் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
செய்து காட்டுவாரா விஜய்
ஆக்கபூர்வமாக அவர் எந்த ஒரு கருத்தையும் பேசவில்லை என கார்த்தி சிதம்பரம் விஜய் மீது அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்திருக்கின்றார். இதற்கெல்லாம் விஜய் பதில் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கின்றார். கார்த்தி சிதம்பரம் மட்டுமல்லாமல் பலரும் விஜய்யிடம் பல கேள்விகளை கேட்டு வருகின்றனர். சிலர் விஜய்க்கு அரசியல் பற்றி முழுமையாக தெரியவில்லை என்றெல்லாம் கூட விமர்சனம் செய்கின்றனர்.
எனவே எப்படி அரசியல் மாநாட்டில் விஜய்யால் ஆவேசமாக பேச முடியுமா ? என்ற சந்தேகத்தையும் கேள்வியையும் அவர் உடைத்து பதிலளித்தாரோ?அதுபோல கார்த்தி சிதம்பரம் உட்பட பலரது கேள்விகளுக்கும் சந்தேகத்திற்கும் விஜய் ஒவ்வொன்றாக பதிலளித்து தன்னால் அரசியலிலும் சாதித்து வெற்றிகரமாக இருக்க முடியும் என நிரூபிக்க வேண்டும். அதுதான் அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் விருப்பமாக இருந்து வருகின்றது. அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விஜய்யின் அடுத்தடுத்த செயல்பாடுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
