Vijay Trichy Campaign,நாளை திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய் பரப்புரை..பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்த பொதுச்செயலாளர் ஆனந்த் – tvk bussy anand request to public on tomorrow vijay trichy campaign

தவெக தலைவர் விஜய் நாளை திருச்சியில் பரப்புரை செய்கின்றார். திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை விஜய் பரப்புரை செய்யும் நிலையில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்

முக்கிய அம்சங்கள்:

விஜய் திருச்சி கிழக்கு பரப்புரை

என்.ஆனந்த் அறிக்கை

bussy anand about vijay trichy campaign
தவெக தலைவர் விஜய் நாளை திருச்சி கிழக்கில் பிரச்சாரம் செய்ய இருக்கின்றார். இதற்கான அனுமதியையும் காவல் துறையில் இருந்து தவெகவினர் பெற்றனர். இதைத்தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி மரக்கடை எம்.ஜி.ஆர் சாலையில் நாளை மதியம் 12 மணி முதல் மாலை நான்கு மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றார் தவெக தலைவர் விஜய். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு பெரம்பூரில் விஜய் பரப்புரை செய்தார்.அந்த பரப்புரையை சுற்றி பல சர்ச்சைகள் போய்க்கொண்டு இருக்கின்றது. விஜய் விதிமீறல் செய்ததாக சொல்லி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தவெகவினர் உரிய அனுமதி எங்களுக்கு கிடைக்கவில்லை என புகார் கொடுத்து வருகின்றனர். இதுபோன்ற பல சர்ச்சைகள் விஜய்யின் பரப்புரை குறித்து இருந்து வருகின்றன. எனவே இதையெல்லாம் தடுக்கும் வகையில் பரப்புரை அமைய வேண்டும் என தவெகவினர் திட்டம்போட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில்தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நாளை தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் பரப்புரை செய்ய உள்ளார். இந்த பரப்புரை நிகழ்ச்சியாக தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குடிநீர் வசதி ,மருத்துவ வசதி போன்ற தேவையான அனைத்து வசதிகளும் தவெகவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய் அவர்களின் வாகனத்தை யாரும் தயவுசெய்து பின்தொடர வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். தலைவரின் பிரச்சார வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம். அதுமட்டுமல்லாமல் தலைவரின் இந்த பிரச்சாரத்தில் பொதுமக்கள் நேரில் வந்து பார்ப்பதை தவிர்த்துக்கொள்ளவும்.
சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், பள்ளி மாணவ மாணவியர்கள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து பரப்புரையில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக தலைவரின் பரப்புரையை சமூகத்தளங்களில் மற்றும் டிவிகளில் காணுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். பிரச்சாரத்திற்கு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே கலந்துகொண்டு முழு ஒத்துழைப்பு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்.
இவ்வாறு நாளை நடைபெறவிருக்கும் பரப்புரையை மிகவும் பாதுகாப்பான முறையில் நடத்த தவெகவினர் அனைத்து வகையிலும் முயற்சி செய்து வருகின்றனர். ஏனென்றால் தவெக விஜய்யின் பரப்புரையில் தான் எதிர்பாராத விதமாக எதாவது ஓரு பிரச்சனை ஏற்படுகின்றது. ஒருபக்கம் காவல் துறையினர் மீது தவெகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மருபக்கம் திமுக அரசு மீதும் குற்றம்சாட்டி வருகின்றனர். இருந்தாலும் தாம் எந்தளவிற்கு பாதுகாப்பாக பரப்புரையை நடத்த முடியுமோ அதற்கான முழு முயற்சியையும் தவெகவினர் செய்து வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய்யை காண பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் காரணமாக சில சமயங்களில் எதிர்பாராத விபத்து ஏற்படுகின்றது என பொதுவான கருத்து இருந்து வருகின்றது. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறு பிள்ளைகள் கூட்டத்தில் பங்கேற்பதால் விபத்துக்கள் ஏற்படுகின்றது. எனவே இதனை தடுக்கும் முயற்சியாக விஜய்யின் பரப்புரையில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என கட்சியின் சார்பாக வேண்டுகோள் வைத்துள்ளனர்.

மாவட்ட செயலாளர்களிடம் TVK ஆனந்த் பேசியது ஏன்_

இது ஒரு நல்ல முடிவாகவே பார்க்கப்படுகின்றது. விஜய்யின் பரப்புரை நேரலையாக ஒளிபரப்படுகின்றது. அதன் மூலம் பல கோடி பேர் பரப்புரையை கேட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நேரலையின் மூலம் விஜய்யின் பரப்புரையை பார்க்குமாறு தாழ்மையுடன் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தவெகவினரின் வேண்டுகோளை கேட்டு பொதுமக்கள் விஜய்யின் பரப்புரைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என தவெக ஆதரவாளர்களால் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.