திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் தற்போது தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் விஜயகாந்தின் ஆன்மா அவர்களை மன்னிக்காது என்றெல்லாம் கூறினார்கள். மறுபக்கம் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது தேமுதிகவிற்கு சாதகமாக அமையும். அவர்களின் கட்சியின் பெயரை நிலைநாட்ட அவர்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது என்ற கருத்துக்களும் போய்க்கொண்டு இருக்கின்றன.
விருதுநகரில் விஜய பிரபாகரன்
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகின்றார். அவரது மகனான விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகின்றார். கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார். கிட்டத்தட்ட நான்காயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் விஜய பிரபாகரன் தோல்வியை தழுவினார்.
இந்நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தலுக்காக மீண்டும் விருதுநகர் தொகுதியில் தான் போட்டியிடுகின்றார் விஜய பிரபாகரன். தற்போது தேர்தல் பரப்புரையில் தீவிரமாக களமிறங்கி இருக்கும் விஜய பிரபாகரன் மக்களிடையே வாக்குகளை சேகரித்து வருகின்றார். அந்த பரப்புரையில் விஜய பிரபாகரன் பேசுகையில், எனது தந்தை மறைவிற்கு பிறகு அவர் விட்டுச்சென்ற பணிகளையும் அவரின் பெயரையும் நிலைநாட்டும் மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது.
விஜய பிரபாகரன் பரப்புரை
ஒரு இளைஞராக இந்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை பயன்படுத்தி வெற்றிபெறுவேன். வெற்றிபெற்று விருதுநகர் மக்களுக்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன். அதற்காக மக்கள் எனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார் விஜய பிரபாகரன்.
இந்நிலையில் கடந்த மக்களவை தேர்தலில் விஜய பிரபாகரன் கணிசமான வாக்குகளை பெற்று மாணிக்கம் தாகூருக்கு கடும் சவால் தந்தார். மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக தான் வென்றது. அதனைத்தொடர்ந்து 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக இந்த தொகுதியில் வெற்றிபெற்றது. எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கையில் விஜய பிரபாகரனுக்கு இந்த தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே தெரிகின்றது.
வெற்றிவாய்ப்பு எப்படி ?
கடந்த மக்களவை தேர்தலிலேயே விஜய பிரபாகரனுக்கு இந்த தொகுதியில் செல்வாக்கு இருப்பதை நம்மால் பார்க்க முடிந்தது. அதைத்தொடர்ந்து இம்முறை அவர்கள் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் கண்டிப்பாக இதெல்லாம் விஜய பிரபாகரனுக்கு சாதகமாகவே தான் அமையும் என தெரிகின்றது. இந்நிலையில் தேமுதிக தற்போது தங்களது பெயரை நிலைநாட்டி பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி எதிர்க்கட்சியாக திகழ்ந்த இந்த கட்சி கடந்த சில வருடங்களாக சற்று பின்னடைவை சந்தித்து வந்தது. மேலும் தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைத்ததால் எதிர்க்கட்சிகள் தேமுதிகவின் வாக்கு வங்கிகள் குறித்து விமர்சனம் செய்து பேசி வந்தனர். அதற்கெல்லாம் பதிலடி தரும் வகையில் அவர்கள் இந்த தேர்தலில் தங்களை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
இம்முறை திமுக கூட்டணியில் பத்து தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இந்த பத்து தொகுதிகளில் முடிந்த அளவிற்கு வெற்றியை பெற்று தேமுதிகவின் பெருமையை நிலைநாட்ட கடுமையாக உழைத்து வருகின்றனர் அக்கட்சியை சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்தத்தில் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய நம்பிக்கையுடன் களம் காண்கின்றனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
