சென்னை,
எம்.சி.சி. -முருகப்பா தங்கக் கோப்பைக்கான 97-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய ராணுவ அணி 6-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கியை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது. மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே அணி 1-0 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தி தொடர்ச்சி யாக 3-வது வெற்றியை பெற்றது. ரெயில்வே அணியில் சிம்ரன்ஜோத் சிங் 39-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். பாரத் பெட்ரோலியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியா ஆக்கி பெடரேஷன் ஜூனியர் அணியை சாய்த்து தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பெற்றது.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்தியன் ஆயில்- கர்நாடகா (மாலை 4.15 மணி), மலேசியா பெடரேஷன் ஜூனியர்-சாய் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.
