”2026 வடகிழக்கு பருவமழை பெருசா கொட்டி தீர்க்க போகுது போல”… இப்படியான பேச்சு தொடர்ச்சியாக எழுந்து வந்தது. அதற்கு முக்கிய காரணம் எல் நினோ தாக்கம். நடப்பு பருவமழை சீசனின் தொடக்கம் நன்றாகவே இருந்தது. வட தமிழகம், டெல்டா, மேற்கு மண்டலம், தெற்கு மாவட்டங்கள் என பரவலாக மழை பெய்தது. சென்னை, கோவையில் விடாமல் மழை பெய்து வெள்ளக்காடாய் காட்சியளித்தது. முதல் ரவுண்ட் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. அர்னாப் புயலும் ஆந்திராவை நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு பாதிப்புகள் இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்து வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்று லேட்டஸ்ட் அறிக்கை வெளியாகியிருக்கிறது.
அக்டோபர் 27 முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதுவும் ஒரு சில இடங்களில் மட்டுமே. இடி, மின்னலையும் எதிர்பார்க்கலாம். மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். மேற்கு, வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.
நவம்பர் ஒன்றாம் தேதி அன்று வட தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
