கிழிந்த ஆடை பாணி, ஃபேஷன் உலகில் Distressed Fashion அல்லது Deconstructed Look என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்டைல் Grunge கலாசாரத்திலிருந்து உருவானது. ஆடைகள் பழையதாகவும், கிழிந்தும், தேய்ந்து போனது போன்ற தோற்றத்தையும் தருவதே இதன் நோக்கம். சமீபகாலமாக சில ஆடம்பர பிராண்டுகள் கிழிந்த சட்டைகளையும், அழுக்கான ஷூக்களையும் பல லட்சங்களுக்கு விற்று இந்த ட்ரெண்டை மீண்டும் முன்னெடுத்து வருகின்றன.

அக்ஷய் குமார் பொதுவாகவே தனது உடற்பயிற்சி மற்றும் ஸ்டைலில் அதிக கவனம் செலுத்துபவர். ஆனால், இந்த முறை அவர் வழக்கத்திற்கு மாறான, பரிசோதனை முயற்சியிலான ஃபேஷனை கையில் எடுத்துள்ளார். பேய்ப் படத்திற்கான ப்ரோமோஷன் என்பதால், சிதைந்து போன ஒரு பங்களாவைப் போல, சிதைந்த கிழிந்த ஆடைகளை அணிந்து படத்தின் கதைக்களத்தோடு ஒரு தொடர்பை ஏற்படுத்த அவர் முயன்றிருக்கிறார் போல…
இந்த ட்ரெண்ட் பொதுவாக மேலை நாடுகளில் `Runway’ எனப்படும் பேஷன் ஷோக்களில் மட்டுமே அதிகம் காணப்படும். இதை ஒரு பொது விழாவிற்கு அக்ஷய் அணிந்து வந்ததுதான் ரசிகர்களுக்கு நெருடலாக இருந்தது என்று கமெண்ட் செய்துள்ளார்கள்.
மொத்தத்தில், `பூத் பங்களா’ டிரெய்லரை விட அக்ஷய்குமாரின் கிழிந்த ஆடைதான் பாலிவுட்டில் வைரல்!
