அசாமில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பாரா ஹிமந்த பிஸ்வா சர்மா?

அது​மட்​டுமல்​லாமல் பாஜக மேலிடம் `ஜதி மதி பேட்​டி’ என்ற பிரச்​சா​ரத்​தைக் கையில் எடுத்​துள்​ளது. இது அசாம் மாநிலத்​தில், பெரும்​பாலும் சட்​ட​விரோதக் குடியேற்​றத்தை எதிர்த்​துப் போராடும் சூழலில், அங்​குள்ள பூர்​வீக மக்​களின் கலாச்​சார அடை​யாளம், நில உரிமை​கள் மற்​றும் தங்​கள் வீடு​களின் மீதான நியாய​மான உடைமை ஆகிய​வற்​றைப் பாது​காப்​பதை வலி​யுறுத்​து​வதற்​காகப் பயன்​படுத்​தப்​படும் ஓர் அரசி​யல் முழக்​க​மாகும். அந்த முழக்​கத்தை முன்​னெடுத்து வாக்கு வேட்​டை​யாடி வரு​கிறது பாஜக.

அதே​நேரத்​தில், அசா​முக்கு புதிய தலைமை வேண்​டும். அசாம் முழு​வதுமே பாஜக​வுக்கு எதி​ரான அலை காணப்​படு​வ​தாக தனது பிரச்​சா​ரத்​தில் கூறி வரு​கிறார் கவுரவ் கோகோய். முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரச்​சா​ரத்தை மேற்​கொண்​டுள்​ளார். அதே​நேரத்​தில் அவருக்​குப் போட்​டி​யாக களத்​தில் இறங்கி கடும் சவால் அளித்து வரு​கிறார் கவுரவ் கோகோய்.

Source link