குமார்கிராமை சேர்ந்த சாஜல் சாஹா கூறும்போது, “ஒரு காலத்தில் அசாம் மக்கள் சிகிச்சைக்காக வடக்கு மேற்குவங்கம் பகுதிக்கு வந்தனர். தற்போது மேற்குவங்கத்தின் குமார்கிராம், கூச்பெஹர், அலிப்பூர்துவார் பகுதி மக்கள் சிகிச்சைக்காக அசாம் செல்கின்றனர்” என்று தெரிவித்தார். வியாபாரி வீரபத்ர சஹாராய் கூறும்போது, “வணிகரீதியாக அடிக்கடி அசாம் சென்று திரும்புகிறேன். ஒரு காலத்தில் அசாமில் இரவு நேரத்தில் நடமாட முடியாது. இப்போது நள்ளிரவில்கூட எந்த பயமும் இல்லாமல் பயணம் செய்ய முடிகிறது” என்று தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “அசாம் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டிருக்கிறது. ஆனால் மேற்குவங்க தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இன்னமும் வறுமையில் வாடுகின்றனர்’’ என்றார்.
