அஞ்சாமல் செயல்படுங்கள்: தேர்தல் கமிஷன் அறிவுரை

சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக, கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுடன், சென்னையில் நேற்று, தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தியது.


அதில், தமிழக அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:

தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளும், பாரபட்சமற்ற தன்மையுடன் செயல்பட வேண்டும். துாண்டுதலால் நடக்கும் விஷயங்களை உறுதியாக கட்டுப்படுத்த வேண்டும். ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்களின் வசதிகளுக்கு முன்னுரிமை செய்ய வேண்டும். இதற்காக, கீழ்மட்ட அதிகாரிகளுக்கு முழுமையான பயிற்சி அளிக்க வேண்டும்.

தேர்தல் செயல்முறைகள் குறித்து விழிப்புணர்வை உறுதி செய்ய வேண்டும். பாரபட்சமற்ற தன்மையை உறுதி செய்து, யாருக்கும் அஞ்சாமல் செயல்பட வேண்டும். தேர்தல் சட்டங்கள், விதிகள் மற்றும் நடைமுறைகளை மீறி செயல்படுவதை, ஒருபோதும் தேர்தல் கமிஷன் பொறுத்துக் கொள்ளாது. இவ்வாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Source link