அதிமுகவின் எதிர்காலம்: எடப்பாடி பழனிசாமி போடும் 350 கணக்கு- அடிமட்டத்தில் கைகொடுக்கும் இரட்டை இலை – how edappadi palaniswami strategy works for aiadmk future with two leaves symbol after delimitation

தமிழக அரசியலில் அதிமுக சந்தித்து வரும் நெருக்கடிகள் அக்கட்சியின் எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்துகின்றன. இருப்பினும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில கணக்குகள் போட்டு கொண்டிருக்கிறார். இது எந்த வகையில் பலனளிக்கும் என்பது பற்றி விரிவாக அலசலாம்.

அதிமுக இனிமேல் என்னவாகும்? என்ற கேள்வி அரசியல் மட்டத்தை தாண்டி சாமானியர்கள் மத்தியில் எதிரொலித்து வருகிறது. ஏனெனில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அக்கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டதாக அதிமுகவினர் கருதுகின்றனர். இதனால் தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தவெகவில் படையெடுத்து வருகின்றனர். பதவி கிடைக்கும். ஏதேனும் ஒரு வகையில் அதிகாரம் தங்கள் வசமிருக்கும். சலுகைகளை பெற்று அரசியல் இருப்பை தக்க வைத்து கொள்ளலாம் என்ற கணக்கு போடுகின்றனர். அடுத்த 5 ஆண்டுகள் மட்டுமின்றி தொலைநோக்கு பார்வையில் ஒரு செட்டில்மெண்ட் கணக்குடன் விஜய் உடன் கைகோர்த்துள்ளனர்.

ஈபிஎஸ் போடும் அரசியல் கணக்கு என்ன?

இவ்வாறு மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை பலரும் தவெகவிற்கு செல்வதால் அதிமுக பலவீனமடைந்து வருகிறது என்றும், இனிமேல் ஆட்சி கட்டிலில் அமர்வதற்கு வாய்ப்பில்லை என்றும் நினைக்கின்றனர். அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிசாமி தலைமை இனி எடுபடாது என்ற பேச்சும் அடிபடுகிறது. ஆனால் இத்தனை சிக்கல்களுக்கு மத்தியிலும் அவர் சைலண்டாக காய் நகர்த்தி வருகிறார். இது எடுபடுமா? என்ற கேள்வி எழுகிறது.

எதற்கும் அசராத EPS…அதிமுகவில் அடுத்தது என்ன?

Fun Mode-க்கு மாறிய தமிழக அரசியல்

இதுபற்றி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறுகையில், அதிமுக தடம்புரண்டு விட்டது என்றும் கருதவில்லை. தவெக பூதாகரமான சக்தி என்றும் பார்க்கவில்லை. தற்போதைய தலைவர்கள், டிஜிட்டல் யுகம் ஆகியவற்றை வைத்து தான் அரசியலை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக 2024ஆம் ஆண்டிற்கு பின்னர் அரசியல் பெரிதாக மாறியுள்ளது. குறிப்பிட்ட வயதினருக்கு கீழே உள்ளவர்களின் பார்வை வேறாக இருக்கிறது. அவர்கள் அரசியலை Fun-ஆக எடுத்து கொள்கின்றனர். அதுமட்டுமின்றி Visual Politics-ஆக மாறியிருக்கிறது. இந்த சூழலுக்கு ஏற்ப தான் எந்த தலைவராக இருந்தாலும் தங்களை வடிவமைத்து கொள்ள முடியும்.

அதிமுக உடன் அமித் ஷாவின் தேர்தல் கணக்கு

எடப்பாடி பழனிசாமி 2024 தேர்தலில் தனியாக தான் போட்டியிட்டார். 20 முதல் 25 சதவீத வாக்குகளை வாங்கியிருந்தார். அது மோசமான செயல்பாடு என்று கூற முடியாது. ஜெயலலிதா இருந்த போதே அப்படித் தான் வாங்கியிருந்தார். அதன்பிறகு அதிமுகவில் பாஜக தலையிட்டது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காய் நகர்த்தல்கள் தொடங்கின. 39 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனக் கணித்தனர். ஆனால் புதிய சக்தியின் வருகை காரணமாக கணக்குகள் பொய்த்தன.

திமுக, அதிமுகவிற்கு ”நோ”- தவெகவிற்கு திரும்பிய வாக்குகள்

தவெக மீது மிகப்பெரிய கவர்ச்சி இருந்தது. இரண்டு திராவிட கட்சிகளும் வேண்டாம் என்று நினைத்தவர்கள் விஜய்க்கு வாக்களித்தனர். இதன்மூலம் ஆட்சி கட்டிலில் அமர்ந்துவிட்டனர். இனிமேல் இவர்கள் செய்யும் தவறுகள் தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது அதிமுக அவ்வளவு மோசமான நிலைக்கு சென்றுவிடவில்லை. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். கட்சிக்கு எதிர்காலம் இருக்கிறது என்று எதை வைத்து எடப்பாடி பழனிசாமி கணக்கு போடுகிறார்?

தொகுதி மறுவரையறை திட்டம்

தமிழகத்திற்கு 350 எம்.எல்.ஏக்கள் இந்தியாவின் தேர்தல் வரைபடமே கூடிய விரைவில் மாறப் போகிறது. தொகுதி மறுவரையறையின் அடிப்படையில் 59 எம்.பிக்கள் வரப் போகின்றனர். ஒரு தொகுதிக்கு 6 எம்.எல்.ஏக்கள் வீதம் கிட்டதட்ட 350 எம்.எல்.ஏக்கள் இடம்பெறுவர். திமுக, அதிமுகவிற்கு பிளஸ் இப்படிப்பட்ட சூழலில் கட்சியை தகவமைத்து கொண்டு செல்லும் வகையில் திமுக, அதிமுக என இரண்டே கட்சிகளுக்கு மட்டுமே கட்டமைப்பு உள்ளது. திராவிட கட்சிகளின் கட்டமைப்பு ஏனெனில் 350 என்ற எண்ணிக்கையில் தொகுதிகள் பிளவுபடும் போது, கீழ்மட்டத்தில் வலுவான அடித்தளம் இருந்தால் தான் அக்கட்சி வெற்றியை நோக்கி செல்ல முடியும். தொகுதி மறுவரையறைக்கு பின்பு வரக்கூடிய சூழலில் இரட்டை இலையின் பலத்தை வைத்து தங்கள் கட்சியின் செல்வாக்கை நிரூபித்துவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போடுவதாக தராசு ஷ்யாம் தெரிவித்தார்.

Source link