அதிமுகவில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் சாமானிய ஏழை ஒருவருக்கு சீட் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பணம், செல்வாக்கு, ஜாதி, மதம் பார்த்து வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில்லை. அவர்களின் வழியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், எந்த வசதியும் இல்லாத கடைகோடி ஏழை தொண்டன் ஏழைத் தொண்டர் ஒருவருக்கு அதிமுக வேட்பாளராக அறிவித்து அரசியலில் அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளார்.
அதிமுகவில் ‘அம்மா கலைக்குழு’ என்ற பெயரில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் சாமானியத் தொண்டரான பி.முருகன், இப்போது விழுப்புரம் மாவட்டம், வானூர் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முருகனுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த வசதியும் இல்லை. கட்சியின் மேடைகளில் அதிமுக கட்சிப் பாடல்களை பாடும் ஏழைக் கலைஞன். வசதியில்லாத சாமானியர்கள் சிலருக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிற குரல் எழும்பியிருந்தது.
அந்த வகையில், நீண்ட காலமாக கட்சிக்கு உழைத்து வரும் முருகனுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார் இபிஎஸ். அரசியல் என்பது செல்வந்தர்களுக்கும், வாரிசுகளுக்கும் மட்டுமல்ல, சாமானியர்களும் சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்று எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காட்டியிருக்கும் வழியில் எடப்பாடி பழனிசாமி முருகனுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வானூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ சக்கரபாணிக்குப் பதிலாக, மக்கள் மத்தியில் எளிமையாகப் பழகக்கூடிய முருகனை நிறுத்தியிருப்பது இ.பி.எஸ்.ஸின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ என்று சொல்லப்படுகிறது.
