சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது.
