அதிமுக கூட்டணியில் பாரிவேந்தரின் ஐ.ஜே.கே., கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு

நமது நிருபர்

அதிமுக கூட்டணியில் பாரிவேந்தரின் ஐ.ஜே.கே., கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மற்ற கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அக்கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஐ சந்தித்த பிறகு, நிருபர்களிடம் பாரிவேந்தர் கூறியதாவது: இந்திய ஜனநாயக கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்த தொகுதிகள், சின்னம் குறித்து இதுவரை முடிவாகவில்லை. இது குறித்து இன்று மதியம் 2 மணிக்கு அறிவிக்கிறோம். இவ்வாறு பாரிவேந்தர் கூறினார்.

Source link