‘அதைப் பற்றி சொல்ல நான் தயாராக இல்லை நோ கமெண்ட்ஸ்’-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் வர இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள், வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்தும், மற்ற கட்சிகளை விமர்சித்தும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாக்கிங் சென்றபடியே திமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் ‘ஜனநாயகன்’ படம் லீக் ஆகி இருக்கும் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ”அதைப் பற்றி எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் ஆதவ் அர்ஜுனா பற்றிய செய்திகளை எல்லாம் படிப்பதில்லை.  எடப்பாடி பழனிசாமி தோல்வியின் விரக்திக்கு போய்விட்டார். நான் நடப்பது இதற்காக நடப்பதில்லை எப்பொழுதும் நடப்பேன்.

எந்த ஊருக்கு போனாலும் சென்னையில் இருந்தாலும் சரி வெளியூருக்கு போனாலும் சரி காலையில் நடப்பது என்னுடைய பழக்கம். அது ஒவ்வொரு ஏரியாவிலும் நடக்கும் பொழுது மக்களைச் சந்திக்கிறேன். தேர்தல் நேரம் என்பதால் மக்கள் என்னைச் சந்திக்கிறார்கள். உற்சாகப்படுத்துகிறார்கள். அது உற்சாகமாக இருக்கிறது” என்றார்.

திமுகவிற்கும் தவெகவிற்கும் மட்டும் தான் போட்டி என விஜய் சொல்லி வருகிறார் என்ற கேள்விக்கு, ”அதைப் பற்றி எல்லாம்  பதில் சொல்ல நான் தயாராக இல்லை. நோ கமெண்ட்ஸ். அதிமுகவின் முகமூடியைப் போட்டுக் கொண்டு பிஜேபி உள்ளே வருகிறது. அதனால் இது திமுகவிற்கும் டெல்லிக்குமான தேர்தல்தான்” என்றார். 

Source link