அனிருத், காவ்யா மாறன் என்ன படித்திருக்கிறார்கள், யார் அதிகம் படித்தவர்?

அனிருத் படிப்பு: வெற்றிகரமான இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தரும், தொழில் அதிபரான காவ்யா மாறனும் காதலித்து வந்த நிலையில் அவர்களின் காதலை ஏற்று திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் பெரியவர்கள்.அனிருத், காவ்யா திருமணம் உறுதியான தகவல் அறிந்ததுமே அவர்களின் சொத்துமதிப்பு எவ்வளவு, என்ன படிப்பு படித்திருக்கிறார்கள், மாப்பிள்ளை, மணமகளில் யார் அதிகம் படித்தவர் என்றெல்லாம் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் சினிமா ரசிகர்கள்.

இந்நிலையில் அனிருத், காவ்யாவின் கல்வித் தகுதியை தெரிந்து கொள்ளுங்கள். சென்னையில் இருக்கும் பிரபலமான பள்ளியான பத்மாசேஷாத்ரி பாலபவனில் படித்தார். அதன் பிறகு லயோலா கல்லூரியில் பி.காம். படித்து பட்டம் பெற்றார். பள்ளி, கல்லூரியில் படித்தபோதே இசை கற்றுக் கொண்டார். லண்டனில் இருக்கும் ட்ரினிட்டி ஸ்கூல் ஆஃப் மியூசிக்கில் பியானோ கற்றுக் கொண்டார். மேலும் சவுண்டு என்ஜினியரிங்கில் டிப்ளமோ வைத்திருக்கிறார்.

காவ்யா பட்டம்: சன் குழும தலைவர் கலாநிதி மாறன், காவேரி தம்பதியின் மகள் காவ்யாவும் அனிருத்தை போன்றே சென்னையில் தான் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பிறகு சென்னையில் இருக்கும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம். படித்தார். பி.காம். பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்துக்கு சென்று அங்கு உள்ள வார்விக் பிசினஸ் ஸ்கூலில் சேர்ந்து எம்.பி.ஏ. பட்டம் பெற்றுவிட்டு நாடு திரும்பினார்.

அனிருத்தும், காவ்யாவும் இளங்கலையில் பி.காம். படித்த போதிலும் அடுத்ததாக அவர்கள் வெவ்வேறு படிப்புகளை படித்திருக்கிறார்கள். இசை தான் எதிர்காலம் என முடிவு செய்த அனிருத் அது தொடர்பாக பிடித்து தன்னை தகுதிபடுத்திக் கொண்டார். குடும்ப பிசினஸை கவனிக்கப் போகிறோம் என்று தீர்மானித்த காவ்யாவோ அதற்கேற்ற படிப்பு படித்தார்.

ரசிகர்கள் கூட்டம்: திரைத்துறையில் இருப்பதால் அனிருத்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். ஆனால் காவ்யா மாறனுக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை நிர்வகித்து வரும் காவ்யா மாறனுக்கு என ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி விளையாடும்போது எல்லாம் கேமராமேன் மட்டும் அல்ல அரங்கில் இருக்கும் ரசிகர்கள், டிவியில் பார்க்கும் மக்களும் காவ்யா மாறனின் முகத்தையே தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

சன் ரைசர்ஸ் அணி தோல்வி அடைந்தால் காவ்யா கண்கலங்கிவிடுவார். அப்பொழுது அதை பார்த்து ரசிகர்களும் கலங்குவார்கள். ஏன்டா செல்லத்த அழ வைக்கிறீங்க. நல்லா விளையாடி, வெற்றி பெறக் கூடாதா என அந்த அணி வீரர்களை ரசிகர்கள் விமர்சிப்பது உண்டு. காவ்யா சிரித்தால் ரசிகர்களும் சிரிப்பார்கள். அந்த அளவுக்கு காவ்யா மீது ரசிகர்களுக்கு அன்பு இருக்கிறது.

மாறன் ஏற்பாடு: அனிருத், காவ்யாவின் காதல் திருமணம் நவம்பர் 11ம் தேதி கிரீஸில் நடக்கவிருக்கும் நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார் காவ்யாவின் அப்பா கலாநிதி மாறன்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

விருந்தினர்கள் தங்கள் லக்கேஜுடன் வந்தால் போதும். மற்றவை எல்லாம் மாறன்கள் பொறுப்பு. திருமணத்திற்கு பிறகு என் மாமனார் யார் தெரியுமா என அனிருத் பெருமையாக சொல்லலாம் என்கிறார்கள் அவரின் ரசிகர்கள். அனிருத் மாமனாரின் சொத்துமதிப்பு ரூ. 24, 600 கோடி என்பது அனைவரையும் மிரள வைத்திருக்கிறது. அனிருத்துகம் குறைவு இல்லை. தன் கடின உழைப்பால் ரூ. 60 கோடி சொத்து வைத்திருக்கிறார்.

Source link