வரவேற்பு அழைப்பு: இசையமைப்பாளர் அனிருத், அவரின் காதலியான காவ்யா மாறனின் திருமண வரவேற்புக்கு சென்னையை சேர்ந்த ரஞ்சனி ஐயங்கார் டப்பா வடிவில் உருவாக்கிய அழைப்பிதழ் மிகவும் பிரபலமாகிவிட்டது. சன் குழும தலைவர் கலாநிதி மாறன் பலருக்கும் அழைப்பிதழ் கொடுத்த புகைப்படங்களில் டப்பாவை மட்டும் தான் பார்க்க முடிந்தது.
கண்டிப்பாக அந்த டப்பாவுக்குள் ஏதாவது இருக்கும் என்று நம்பப்பட்டது. ரஞ்சனி ஐயங்கார் அந்த அழைப்பிதழ் டப்பாவை திறந்து காட்டி வீடியோ வெளியிட்ட போதிலும், பத்திரிகையை தாண்டி என்ன இருக்கிறது என்பதை அவர் காட்டவில்லை. அதனால் அப்படி என்ன ரகசியமாக இருக்கும் என்கிற ஆவல் அனைவருக்கும் ஏற்பட்டது.
டப்பா ரகசியம்: இந்நிலையில் சம்பத்குமார் சண்முகம் என்பவருக்கு அழைப்பிதழ் கிடைத்திருக்கிறது. அவர் அந்த டப்பாவை திறந்து பார்த்து அதில் உள்ளவற்றை புகைப்படங்கள் எடுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கையெழுத்தில் மணமக்களின் பெயர்கள் எழுதப்பட்ட அழைப்பிதழ் உள்ளது. அது போக அலங்கார பொருள் ஒன்றும், ஜோர்டன் பாதாம் பாக்கெட் ஒன்றும் டப்பாவில் இருந்தது.
வெளியே இனிப்பான கோட்டிங்கிற்குள் பாதாம் இருப்பது தான் ஜோர்டன் பாதாம். இது பாரம்பரியம், கலாச்சாரத்தை குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. அழைப்பிதழ் வெள்ளை, ஊதா நிறத்தில் இருக்கும் நிலையில் அதில் வெள்ளை நிற ஜோர்டன் பாதாம் பாக்கெட் இருப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது.
டப்பாவுக்குள் ஏகப்பட்ட பொருட்களை வைக்காமல் சிம்பிளாக ஒரு உணவு பொருள், ஒரு அலங்கார பொருளுடன் முடித்துக் கொண்டது அழகாக உள்ளது. இந்த அழகிய வேலைப்பாடு கொண்ட அழைப்பிதழ் ஒன்றின் விலை ரூ. 20 ஆயிரம் மட்டுமே. மேலும் அதை வடிவமைக்க மூன்றரை மாதங்கள் ஆகியிருக்கிறது.
காவ்யா ஐடியா: அழைப்பிதழ் இந்த அளவுக்கு சிறப்பாக வர மணமகள் காவ்யா மாறன் கொடுத்த ஐடியாக்களும் காரணம் என்று ரஞ்சனி ஐயங்கார் தெரிவித்துள்ளார். திருமணம் கிரீஸில் நடப்பதால் அதில் கலந்து கொள்ளுமாறு தங்களுக்கு தெரிந்த அனைவரையும் அழைக்கவில்லை.
குடும்பத்தார் மட்டும் தான் நான்கு தனி விமானங்களில் பயணம் செய்கிறார்கள். அதே சமயம் வரவேற்புக்காக பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அஜித் குமார், முதல்வர் ஜோசப் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதில் ரஜினிகாந்த், தனுஷ், விஜய் ஒரே இடத்தில் இருக்கப் போகிறார்களா என்று தான் சினிமா ரசிகர்கள் பரபரப்பாக பேசி வருகிறார்கள். அவர்கள் மூவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பார்க்க காத்திருக்கிறார்கள்.
காதல் டூ கல்யாணம்: அனிருத் திருமண தகவல் வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் அவரை பற்றியும், காவ்யா மாறனை பற்றியும் தான் பேச்சாக உள்ளது. ஜெயிலர் பட வேலை ஆரம்பித்தபோது துவங்கிய காதல் ஜெயலிர் 2 ரிலீஸான பிறகு கல்யாணத்தில் முடிகிறது என்கிறார்கள் ரசிகர்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
முன்னதாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் மேடையில் அனிருத் பாடி, ஆட அதை பார்த்து கூட்டத்தில் இருந்த காவ்யா மாறன் ரசித்து தானும் பாட அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. காவ்யா, அனிருத் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை அவர்களாக வெளியிட்டால் தான் உண்டு. அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும் என ஏஐ உதவியுடன் அவரிகளின் திருமண புகைப்படங்களை உருவாக்கி சந்தோஷப்பட்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
Source link
